செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரை சீரியல்களில் நடிக்கத்தொடங்கியதன் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் பிரியா பவானி சங்கர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலம், தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். அப்படத்தில் அவர் வைபவ்வுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
24
இதையடுத்து மாஃபியா, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஓ மணப்பெண்னே, கசடதபற போன்ற படங்களில் நடித்த பிரியாவுக்கு கடந்த ஆண்டு வெற்றிகரமான ஆண்டாகவே அமைந்தது. கடந்தாண்டு அருண் விஜய்க்கு ஜோடியாக யானை, அதர்வா உடன் குறுதி ஆட்டாம், தனுஷின் திருச்சிற்றம்பலம் என இவர் நடித்த மூன்று படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றன.
தற்போது கைவசம் டஜன் கணக்கிலான படங்களை வைத்துக் கொண்டு தமிழ் சினிமாவில் செம்ம பிசியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் பிரியா பவானி சங்கர். சிம்புவுடன் பத்து தல, எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை, ஷங்கர் இயக்கும் இந்தியன் 2, ஜெயம் ரவிக்கு ஜோடியாக அகிலன், ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன், அஜய் ஞானமுத்து இயக்கும் டிமாண்டி காலனி 2 ஆகிய படங்களும் இந்த லிஸ்ட்டில் அடங்கும்.
44
இதுதவிர தெலுங்கிலும் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார் பிரியா பவானி சங்கர். தெலுங்கில் அவர் நடித்துள்ள முதல் படம் ‘கல்யாணம் கம்நீயம்’. அனில் குமார் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தோஷ் சோபன் என்பவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் பிரியா பவானி சங்கர். இப்படம் வருகிற ஜனவரி 14-ந் தேதி பொங்கல் விடுமுறையில் ரிலீசாக உள்ளது. அன்றைய தினம் தான் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் தெலுங்கு வெர்ஷன் ஆன வாரசுடுவும் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.