விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' சீரியலில், செம்பா என்கிற கதாபாத்திரத்தில் அப்பாவி பெண்ணாக நடித்து ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களையும், தன் பக்கம் கவர்ந்து இழுத்தவர் ஆல்யா மானசா.
அந்த வகையில் ஆல்யா மானசா தன்னுடையாக மகள் ஐலாவை பெற்றெடுத்த பின்னர், விஜய் டிவியில் துவங்கப்பட்ட 'ராஜா ராணி 2' சீரியலில் நடித்தார். சீரியல் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், இரண்டாவது முறையாக ஆல்யா மானசா கர்ப்பமாக ஆனதால், அந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.
மேலும் தற்போது சன் டிவியில் நடிகர் ரிஷிக்கு ஜோடியாக, 'இனியா' என்ற சீரியலில் நடித்து வருகிறார். ஆணாதிக்கம் கொண்ட ஒருவர், சுதந்திரமாக முடிவெடுக்க கூடிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, அந்த பெண்ணையும் அடக்கி ஆள நினைக்கிறார். இதனை எப்படி இனியா சமாளிப்பார் என்பதை, மையமாக வைத்து இந்த சீரியல் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி, டிஆர்பி-யில் மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது.
இந்த வீடியோவில் நான் எதிர்பாக்காத ஒன்று என்னுடைய வாழ்க்கையில் நடந்துள்ளது. என்னுடைய கால்கள் பிராக்சர் ஆகி உள்ளன. எனவே தன்னுடைய நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் எனக்காக வேண்டிக் கொள்ளும் படி கூறியுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்களும் விரைவில் இவர் குணமடைய தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.