இளம் திறமையாளர்கள் திறமைகளை வெளிக்கொண்டுவரும் இடமாக உள்ளது விஜய் டிவி. குறிப்பாக விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் சீனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் இன்று பின்னணி பாடகர்களாக உள்ளனர் என்பது நாம் அறிந்ததே.
சிறிய வயதில் இருந்தே, நடனம் மற்றும் இசை கற்று வந்த இவர்... பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரிசுகளை தட்டி சென்றவர்.
அந்த வகையில் 2017ஆம் ஆண்டு பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குயில் தோப்பு என்ற பாடல் நிகழ்ச்சில் பங்கு பெற்று, அந்த போட்டியில் ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வென்றார் மானஸ்வி.
இந்நிலையில் இவர் திரையரங்கில் கதறி அழுதது குறித்து கூறியுள்ள தகவல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதி - நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தை மானஸ்வி தன்னுடைய தந்தையுடன் திரையரங்கம் சென்று பார்த்துள்ளார்.
அப்போது விஜய் சேதுபதி இறக்கும் சீனில், அவரை அடிப்பதை பார்த்து... அப்பா, விஜய் சேதுபதியை அடிப்பதை நிறுத்த சொல்லுங்கள், அவரை அடிக்க வேண்டாம் என தன்னையும் மீறி... அழுதுள்ளார். இதனால் திரையரங்கில் இருந்த பலர் இவரையே பார்த்துள்ளனர்.
இந்த தகவலை வெளியிட்டு அந்த நாளை மட்டும் என்னுடைய வாழ்க்கையில் மறக்கவே முடியாது என கூறியுள்ளார் சூப்பர் சிங்கர் பிரபலமான மானஸ்வி .