தம்மாத்தூண்டு பிகினியில் தாறுமாறு போஸ் கொடுத்த பிக்பாஸ் சாக்‌ஷி... வைரலாகும் பர்த்டே ஸ்பெஷல் கிளிக்ஸ்

Published : Jul 20, 2022, 12:23 PM ISTUpdated : Jul 20, 2022, 02:36 PM IST

Sakshi agarwal : பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகை சாக்‌ஷி அங்கு எடுத்த பிகினி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

PREV
110
தம்மாத்தூண்டு பிகினியில் தாறுமாறு போஸ் கொடுத்த பிக்பாஸ் சாக்‌ஷி... வைரலாகும் பர்த்டே ஸ்பெஷல் கிளிக்ஸ்

ஐடி துறையில் வேலைபார்த்து வந்த சாக்‌ஷி, மாடலிங் மீது கொண்ட ஆர்வம் காரணமாக அதிலும் ஆர்வம் காட்டி வந்தார். விடுமுறை நாட்களில் பேஷன் ஷோக்களில் பங்கேற்பது, விளம்பர படங்களில் நடிப்பது என ஆரம்பக்கட்டத்தில் செய்து வந்த இவர், சூர்யாவுடன் ஒரு நகைக்கடை விளம்பரத்திலும் நடித்தார்.

210

பின்னர் மாடலிங் துறையில் கவனம் செலுத்த வேண்டும் என முடிவெடுத்த சாக்‌ஷி, தனது ஐடி வேலையில் இருந்து விலகி முழுநேரமாக மாடலிங்கில் ஈடுபட தொடங்கினார். அடுத்தடுத்து ஏராளமான விளம்பரங்களில் நடித்த சாக்‌ஷி, அட்லீ இயக்கிய ராஜா ராணி படம் மூலம் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்.

310

இப்படத்தில் ஒரு காமெடி சீனில் மட்டும் நடித்த இவர், அடுத்தடுத்து யோகன், திருட்டு விசிடி, ஆத்யன், கககபோ போன்ற சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார். இதையடுத்து இவருக்கு கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு தான் காலா படம்.

இதையும் படியுங்கள்.... ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி - நித்தியா மேனன் நடித்துள்ள 19(1)(a)..! எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டீசர்!

410

பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்திருந்தார் சாக்‌ஷி. என்ன தான் அவர் சூப்பர்ஸ்டார் உடன் நடித்திருந்தாலும், அவரை பேமஸ் ஆக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

510

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட இவர், அதில் கவினை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் அந்த காதல் காத்துவாக்குல கடந்து போனது.

610

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகை சாக்‌ஷிக்கு ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்தன. அதன்படி அஜித்துடன் விஸ்வாசம், வெங்கட் பிரபு இயக்கிய குட்டி ஸ்டோரி, சுந்தர் சி இயக்கிய அரண்மனை 3 போன்ற முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றினார்.

இதையும் படியுங்கள்.... அமீர் கொடுத்த காதல் பரிசால் கண்கலங்கிய பாவனி - வைரலாகும் ரொமாண்டிக் வீடியோ

710

தற்போது இவர் கைவசம் தி நைட், புரவி, கெஸ்ட், குறுக்கு வழி, 120 ஹவர்ஸ், பிரபுதேவாவின் பஹீரா, எஸ்.ஏ.சி இயக்கிய நான் கடவுள் இல்லை, ஜிவி பிரகாஷ் உடன் ஆயிரம் ஜென்மங்கள் என அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன.

810

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் சாக்‌ஷி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

910

இந்நிலையில், தற்போது அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ள சாக்‌ஷி, அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில் தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இதற்காக அங்குள்ள கடற்கரையில் கருப்பு நிற பிகினி உடை அணிந்தபடி போட்டோஷூட் ஒன்றையும் நடத்தி உள்ளார்.

1010

அவர் முதன்முறையாக பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தியதைப் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை அள்ளித்தெளித்து தங்களது அன்பை வெளிபடுத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்.... தளபதி 67-ல் டுவிஸ்ட் வைத்த லோகேஷ்... சமந்தா வில்லி ஆனதால் விஜய்க்கு ஜோடி யார் தெரியுமா?

click me!

Recommended Stories