நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஏற்பாடுகள் முதல் அனைத்து செலவுகளையும் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனமே ஏற்றுக்கொண்டதாகவும், இதனால் நயன் - விக்கி இருவரும் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் இவர்களுக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுவது திரையுலகினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
2005 ஆம் ஆண்டு 'நானும் ரவுடிதான்' படத்தின் படப்பிடிப்பில் ஆரம்பமான, நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் காதல் பந்தம், ஒருவழியாக கடந்த மாதம் திருமணத்தில் முடிந்தது.
29
கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பெயரை சொந்தமாக்கி கொண்ட நடிகை நயன்தாராவின் திருமணத்தில், பல முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மகாபலிபுரத்தில் மிக பிரமாணமாக நடந்த நயன் - விக்கி திருமணதிற்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருகான், இயக்குனர் மணிரத்னம், சூர்யா - ஜோதிகா, விஜய் சேதுபதி மற்றும் அவரது மனைவி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இசையமைப்பாளர் அனிருத், உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
49
இதுகுறித்த புகைப்படங்கள் சில வற்றையும் இயக்குனர் விக்னேஷ் சிவன், அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இது தான் இவர்களுக்கு தற்போது மிகப்பெரிய தலைவலியாகவும் மாறியுள்ளது.
அதாவது நயன் - விக்கி இருவரும் தங்களுடைய, திருமண வீடியோ ஒளிபரப்பு உரிமையை ரூ.25 கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்ததாகவும், இதன் காரணமாக திருமணத்திற்கான ஆடம்பரச் செலவுகள் அனைத்தையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டது.
69
அதாவது நயன் - விக்கி இருவரும் தங்களுடைய, திருமண வீடியோ ஒளிபரப்பு உரிமையை ரூ.25 கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்ததாகவும், இதன் காரணமாக திருமணத்திற்கான ஆடம்பரச் செலவுகள் அனைத்தையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டது.
தங்களின் ஒப்பந்தத்தை இவர்கள் மீறியதை சுட்டி காட்டி நெட்பிளிக்ஸ் நிறுவனம் நயன்தாராவின் திருமண வீடியோவை ஒளிபரப்பும் ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக கூறப்படுகிறது.
89
இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஆப்பு வைக்கும் விதமாக நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளதாகவும், அதில் திருமணத்திற்கான செலவு தொகை மற்றும் திருமண வீடியோவுக்கான செலவுத்தொகையை திருப்பி தரவேண்டுமென தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே நயன் - விக்கி இருவரும் திருமண உடைகள்... போன்ற தங்களின் செலவை தவிர மற்ற எந்த செலவும் செய்யாமல், ஓசியில் திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இப்படி ஒரு நோட்டீஸ் நெட்பிளிக்ஸ் தரப்பில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் திரையுலகினர் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.