நடிகை கர்ப்பமான பின்னர் வைரலாகும் இந்து-முஸ்லீம் முறைப்படி நடந்த விஜய் டிவி சீரியல் நடிகரின் திருமண போட்டோஸ்!

First Published | Sep 27, 2022, 8:45 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'செல்லம்மா'  சீரியல் நாயகன் அர்ணவ், 'செவ்வந்தி' சீரியல் நடிகையை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட நிலையில்,  திவ்யா கர்ப்பமான பின் திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
 

சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற 'கேளடி கண்மணி' தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர்கள் அர்ணவ் மற்றும் திவ்யா. 

இந்த சீரியலில் நடித்த போது, இருவரும் நட்பாக பழகிய நிலையில்... ஒரு நிலையில் காதலிக்க தொடங்கினர். 2017 ஆம் ஆண்டு காதலிக்க தொடங்கிய இந்த ஜோடி, 5 ஆண்டுகளுக்கு பின்னர் திருமண வாழ்க்கையிலும் ஒன்று சேர்த்துள்ளனர். 

மேலும் செய்திகள்: சிக்கிய சுஹாசினி! 'பொன்னியின் செல்வன்' ரிலீசுக்கு முன்பே வீடியோ வெளியிட்டு வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்!
 

Tap to resize

அர்ணவ் முஸ்லீம் என்பதால் இவர்களின் திருமணம், முஸ்லீம் மற்றும் இந்து முறைப்படி நடந்துள்ளது. திருமணம் நடந்த போது, இது குறித்து வெளியே சொல்லாத இந்த ஜோடி, கர்ப்பமான பின்னர் தங்களுடைய திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தெரிவித்து வருகிறார்கள்.

இரண்டு மாதம் கர்ப்பமாக இருக்கும் திவ்யாவுக்கு ஒரு பக்கம் வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. தற்போது இவர், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும்.. 'செவ்வந்தி' தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். 

மேலும் செய்திகள்: காதலில் சிக்கி விட்டாரா ஜான்வி? உன்னுடன் இல்லாதது சோகமான நாள்... அவுட்டோர் பதிவால் அப்செட்டான பிரபலம்!
 

அர்ணவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், செல்லமா தொடரில் நாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!