ps 1
மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வம் தற்போது திரைக்கு தயாராகியுள்ளது. வரும் 30ம் தேதி உலகம் எங்கும் திரை காண உள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பான் இந்தியா படமாக திரையிடப்பட உள்ளது.
ps 1
பல ஆண்டு முயற்சிக்குப் பிறகு தற்போது பொன்னியின் செல்வன்னை படமாக்கியுள்ளார் மணிரத்தினம். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கமலஹாசன், ரஜினிகாந்த், சங்கர் என பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ps 1
இதை தொடர்ந்து படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் படம் குறித்த பிரமோஷனுக்கு படை எடுத்து வருகிறது பட குழு. இதற்காக மும்பை போன்ற முக்கிய நகரங்களுக்கு சென்றுள்ள பொன்னியின் செல்வன் அங்கு கலந்து கொள்ளும் பிரமோஷன் விழா போட்டோக்கள் தற்போது சமூக வலைதளத்தை நிரப்பி வருகிறது.