Thunivu
சமீபத்தில் அஜித்குமாரின் நடிப்பில் வெளியாக இருந்த வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. முன்னதாக எச். வினோத், போனி கபூர் கூட்டணியில் உருவாகி இருந்த நேர்கொண்ட பார்வையும் மிதமான வரவேற்பை மட்டுமே பெற்றது. இந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக துணிவு படத்தின் மூலம் இந்தக் கூட்டணி அமைந்துள்ளது. இதன் பட குழு நடிகர்கள் என டீம் குறித்த எந்த தகவலையும் பட குழு இதுவரை வெளியிடவில்லை. முன்னதாக ஒய்வு நேரத்தில் உலகைச் சுற்றிப் பார்க்க சென்றிருந்த அஜித் குமாரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது.
Thunivu
தற்போது சுற்றுலா முடிந்து ஊர் திரும்பி உள்ள அஜித்குமார் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஹைதராபாத், சென்னை தற்போது தாய்லாந்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் முதல் செட்யூல் ஹைதராபாத்தில், சென்னையில் உள்ள மவுண்ட் ரோடு போன்ற செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டது. இந்த படத்தில் இரு வேறு தோற்றங்களில் அஜித்குமார் தோன்றுவார் என கூறப்படுகிறது. அதோடு அசுரன் நாயகி மஞ்சுவாரியர் இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளதாகவும் சமுத்திரக்கனி முக்கிய ரோலில் நடித்துள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.
பொன்னியின் செல்வன் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? தீயாய் பரவும் செய்தி !
Thunivu
அஜித்குமாரின் 61வது படமான இந்த படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியானது. சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி அஜித்திருக்க துணிவு என்னும் பெயர் ரூபாய் நோட்டில் எழுதப்பட்டிருந்தது. இந்த போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் வாரிசு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட அடுத்த வருட பொங்கல் அன்று துணிவு படமும் வெளியாகும் என ஒரு கருத்தும் நிலவி வருகிறது. இதனால் இரு ரசிகர்களுக்கும் இடையே மோதலும் ஏற்பட்டுவிட்டது.
Thunivu
அதோடு துரிவுபடத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் தமிழகத்தில் விநியோகிக்கும் உரிமையை பெறும் என்றும் தகவல் சொல்கிறது. இந்நிலையில் துணிவு படத்தின் ஓடிடி உரிமையை மிகப்பெரிய இணையதள நிறுவனம் ஒன்று முன்கூட்டியே வாங்கிவிட்டதாகவும் சமீபத்திய செய்தி தெரிவிக்கிறது. அதாவது நெட்பிளாக்ஸ் ஓடிடி நிறுவனம் துணிவு படுத்தின் உரிமையை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாம். படம் உருவாவதற்கு முன்னரே ஓடிடி விற்பனையானது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய படங்களின் தோல்வி காரணமாக இந்தப் படம் அதிரடி திரில்லராக அமைந்து ரசிகர்களை குஷிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமர்சனங்களை கடந்து மீண்டும் இணையும் அட்லீ - விஜய் கூட்டணி..இந்த முறை மிகப்பெரிய பட்ஜெட்டில் தகவல் இதோ