பொன்னியின் செல்வன் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? தீயாய் பரவும் செய்தி !

First Published | Sep 27, 2022, 3:52 PM IST

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் சம்பளம் குறித்த விவரங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

ps 1

வரும் செப்டம்பர் 30ம் தேதி திரைக்காண உள்ள பொன்னியின் செல்வன் படம் கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. மணிரத்தினத்தின் கனவு படமான இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரபு, பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலரும் குழுமியுள்ளனர். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த படம் உருவாகியுள்ளது. சோழ வம்ச வரலாற்றை மையமாகக் கொண்டுள்ள இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிக அளவில் நிழவி வருகிறது.

விமர்சனங்களை கடந்து மீண்டும் இணையும் அட்லீ - விஜய் கூட்டணி..இந்த முறை மிகப்பெரிய பட்ஜெட்டில் தகவல் இதோ

ps 1

சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வன் தான் வரலாற்று சிறப்புமிக்க படமாக வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் நல்ல புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் சம்பளம் குறித்த விவரங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

ஸ்லீவ் லெஸ் உடன் மெல்லிய மின்னும் சேலையில் குந்தவை..திரிஷாவின் சூப்பர் கூல் போட்டோஸ்

Tap to resize

ps 1

அதன்படி ஆதித் கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் இந்த படத்திற்காக 12 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்றுள்ளார்.  இவர்தான் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்று கூறப்படுகிறது. அதேபோல இரட்டை வேடத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் ரூ.10 கோடியை பெற்றுள்ளார். அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜெயம் ரவிக்கு 8 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது.

ps 1

வந்தியதேவன் வேடத்தில் நடிக்கும் நடிகர் கார்த்தி படத்திற்காக 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். த்ரிஷா இரண்டு கோடி வசூலித்துள்ளார். தொடர்ந்து பிரகாஷ்ராஜ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முறையே 1.5 கோடியை சம்பளமாக பெற்றுள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசை மேற்கொள்ள ஒளிப்பதிவை ரவிவர்மன் கையாண்டுள்ளார். பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கண்டுள்ளது.

Latest Videos

click me!