இந்நிலையில், நானே வருவேன் படத்தை புரமோட் செய்யும் வகையில் தயாரிப்பாளர் தாணு பேட்டி கொடுத்து வருகிறார். அந்தவகையில் பிரபல தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் பேட்டி அளித்த போது தொகுப்பாளர், தனுஷும் செல்வராகவனும் புரமோஷனுக்கு வராதது குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் சற்று கோபமான தயாரிப்பாளர் தாணு, இதே கேள்வியை அஜித், விஜய்யிடம் நீ கேட்க முடியுமா என தொகுப்பாளரை பார்த்து கேட்டார்.
மேலும், இன்னைக்கு தனுஷ் வரணும்னு நினைச்சா தாராளமா வந்திருக்கலாம். ஆனா இதனை ஒரு சர்ச்சை ஆக்க வேண்டாம். இப்படிலாம் இல்லாமல் கூட நம்மால் வர முடியும், தமிழ்நாடு முழுக்க போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்துகொண்டு தான் இருக்கிறோம்.
இதையும் படியுங்கள்.... கூல் சுரேஷ் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றார் ஐசரி கணேஷ்.. இதுதான் மிகப்பெரிய பரிசு என கண்கலங்கிய கூல் சுரேஷ்