'குட் பை' பட புரோமோஷனின் கலந்து கொண்ட ராஷ்மிகா, கவர்ச்சி உடையில் கலந்து கொண்டு ரசிகர்கள் ஹார்ட் பீட்டை எகிற வைத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நேஷ்னல் கிரஷ் என கூறும் அளவிற்கு, ஒட்டு மொத்த ரசிகர்கள் மனதிலும் நீங்காத இடம் பிடித்துள்ள, ராஷ்மிகா மந்தனா, தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தென்னிந்திய மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார்.
25
மிக குறுகிய காலத்தில் இவரது அசுர வளர்ச்சி பல, இளம் நடிகைகளை ஜெலஸ் ஆக்கியுள்ள போதிலும், இவர் தான் நாயகியாக வேண்டும் என, பல முன்னணி இளம் ஹீரோக்கள் அடம் பிடித்து, ராஷ்மிகாவை தங்களின் படங்களில் கமிட் செய்ய வைக்கிறார்களாம்.
இந்நிலையில் இவர், பாலிவுட்டில் நடிகர் அபிதாப் பச்சன் கதையின் நாயகனாக நடித்துள்ள 'குட் பை ' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
45
தற்போது 'குட் பை' படத்தின் புரோமோஷன் பணிகளில் தான் ராஷ்மிகா அதிக கவனம் செலுத்தி வருகிறார். நேற்று நடந்த இந்த படத்தின் புரோமோஷனின் தங்க நிறத்திலான டீப் நெக் வைத்த லெகங்காவில் கலந்து கொண்டு அனைவரது பார்வையையும் தன் பக்கம் திருப்பினார்.