நானே வருவேன்... செல்வராகவன் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் - என்ன காரணம் தெரியுமா?

First Published | Sep 27, 2022, 12:50 PM IST

Selvaraghavan : முதல்வர் மு.க.ஸ்டாலின் இயக்குனர் செல்வராகவனின் திடீர் விசிட் அடித்து, அவர்களது குடும்பத்தினரை சந்தித்து பேசியபோது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனான செல்வராகவன், தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து தனுஷ் நடித்த புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களை இயக்கிய செல்வராகவன், கடந்த 11 ஆண்டுகளாக அவருடன் பணியாற்றாமல் இருந்து வந்தார். இவர்கள் காம்போவிற்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

இந்நிலையில், தற்போது அவர்கள் இருவரும் இணைந்து நானே வருவேன் என்கிற படத்தை எடுத்துள்ளனர். இப்படத்தின் நடிகர் தனுஷ் நடித்துள்ளதோடு, கதை, திரைக்கதையும் அமைத்துள்ளார். செல்வராகவன் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 29-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. அதற்கான ரிலீஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... உசிலம்பட்டி பள்ளிக்கு வந்த நடிகை கத்ரீனாவை ‘அரபிக்குத்து’ ஆட வைத்த மதுரை டான்ஸ் மாஸ்டரின் நெகிழ்ச்சி பேட்டி

Tap to resize

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இயக்குனர் செல்வராகவனின் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்து, அவர்களது குடும்பத்தினரை சந்தித்து பேசி உள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செல்வராகவன், “மரியாதைக்குரிய முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்கள் குடும்பத்தை காண வந்த தருணம். என்ன ஒரு ஸ்பெஷலான சந்திப்பு” என நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார்.

இருப்பினும் அவர் எதற்காக வீட்டிற்கு வந்தார் என்கிற விவரத்தை செல்வராகவன் வெளியிடவில்லை. நானே வருவேன் படம் ரிலீசாக உள்ள சமயத்தில் மு.க.ஸ்டாலின், செல்வராகவனின் வீட்டிற்கு சென்றுள்ளதால், அவர் படம் குறித்து ஏதாவது பேசியிருக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த சந்திப்புக்கான காரணத்தை இயக்குனர் செல்வராகவன் சொன்னால் தான் எது உண்மை என்பது தெரியவரும்.

இதையும் படியுங்கள்... தனுஷின் விவாகரத்து குறித்த கேள்வியால் சட்டென டென்ஷன் ஆன கஸ்தூரி ராஜா - கோபத்தில் என்ன சொன்னார் தெரியுமா?

Latest Videos

click me!