விமர்சனங்களை கடந்து மீண்டும் இணையும் அட்லீ - விஜய் கூட்டணி..இந்த முறை மிகப்பெரிய பட்ஜெட்டில் தகவல் இதோ

Published : Sep 27, 2022, 04:51 PM ISTUpdated : Sep 27, 2022, 07:03 PM IST

மீண்டும் அட்லி விஜய் கூட்டணி உருவாக உள்ளதாகவும், அதுவும் இந்த முறை மிகப்பெரிய பட்ஜெட் என தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

PREV
14
விமர்சனங்களை கடந்து மீண்டும் இணையும் அட்லீ - விஜய் கூட்டணி..இந்த முறை மிகப்பெரிய பட்ஜெட்டில் தகவல் இதோ
thalapthy vijay

ஒரு காலகட்டத்தில் தளபதி விஜயின் ஆஸ்த்தான இயக்குனராக இருந்தவர் தான் அட்லீ. மெர்சல் துவங்கி பிகில் என பிளாக்பஸ்டர் படங்களை இவர் கொடுத்திருந்தார். ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்து ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த அட்லீக்கு விஜய்யின் தொடர் படங்கள் மிகப்பெரிய புகழை கொண்டு வந்து கொடுத்தது. ஆனால் இந்த படங்கள் அனைத்துமே மாற்று மொழி படங்களின் காப்பி என தொடர் விமர்சனங்களும் எழுந்தது.  இருந்தும் தளராத அட்லீ தற்போது பாலிவுட் பக்கம் திரும்பி விட்டார்.

24
thalapathy vijay

அங்கு ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க, விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு மாத காலமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலைகள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட அட்லீயின் பிறந்தநாள் பார்ட்டியில் ஷாருக்கான், விஜய் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவர்கள் குறித்தான புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியானது. இதை தொடர்ந்து ஜவான் படத்தில் விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாகவும் ஒரு தகவல் பரவியது. 

அதற்குள் அஜித்தின் துணிவு ஓடிடி உரிமை விற்றுப்போனது ..மிகப்பெரிய விலைக்கு வாங்கிய பிரபல நிறுவனம்

34
thalapathy vijay

இந்நிலையில் மீண்டும் அட்லி விஜய் கூட்டணி உருவாக உள்ளதாகவும், அதுவும் இந்த முறை மிகப்பெரிய பட்ஜெட் என தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இந்த ஜோடி மீண்டும் இணையும் படத்தை மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் தான் தயாரிக்க உள்ளதாம். அதுவும் 300 கோடி பட்ஜெட்டில் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

பொன்னியின் செல்வன் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? தீயாய் பரவும் செய்தி !

44
thalapathy vijay

தற்போது விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வரும் இந்த படம் குடும்ப செண்டிமெண்ட் படமாக அமைகிறது. இதில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பூ, ஷாம் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இணைந்துள்ளனர். இந்த படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு துவங்கி விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories