என் பொண்டாட்டி இவங்க தான்; நடிகையுடனான கிசுகிசுக்கு பின் விஜய் டிவி சீரியல் நடிகர் போட்ட பதிவு வைரல்

Published : Mar 04, 2025, 11:24 AM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான ஸ்டாலின் முத்து தன் மனைவியின் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

PREV
15
என் பொண்டாட்டி இவங்க தான்; நடிகையுடனான கிசுகிசுக்கு பின் விஜய் டிவி சீரியல் நடிகர் போட்ட பதிவு வைரல்

Pandian Stores 2 Serial Actor Stalin Muthu : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடித்து வரும் ஸ்டாலின் முத்து, நடிகையுடன் கிசுகிசுவில் சிக்கியதால், தற்போது தன்னுடைய உண்மையான மனைவியின் போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

25
Stalin Muthu Family

இயக்குனர் பாரதிராஜாவின் உறவினரான ஸ்டாலின் முத்து, தேனியை சேர்ந்தவர். இவர் பாரதிராஜா இயக்கிய தெக்கத்திப் பொண்ணு என்கிற சீரியல் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர், சரவணன் மீனாட்சி, 7சி போன்ற தொடர்களில் நடித்த ஸ்டாலின் முத்துவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த தொடர் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். இந்த சீரியலின் முதல் பாகம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

35
Stalin Muthu Wife

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீரியல் நடிகை ஒருவருடன் ஸ்டாலின் முத்து எடுத்த புகைப்படம் ஒன்றை நெட்டிசன் ஒருவர் பதிவிட்டு, அவர்களுக்கு திருமண நாள் என்றும், வாழ்த்துக்கள் என்றும் பதிவிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தை உண்மை என நம்பி, பலர் வாழ்த்துக்கள் தெரிவிக்க ஆரம்பித்தனர். இந்த விஷயம் அறிந்த நடிகர் ஸ்டாலின் முத்து, அந்த புகைப்படம் உண்மை இல்லை என்றும் அதனால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறினார்.

இதையும் படியுங்கள்... Pandian Stores: ராஜிக்காக பாண்டியனிடம் மோதும் கதிர்; அசிங்கப்பட்ட தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்

45
Stalin Muthu Real Wife

மேலும் இது தொடர்பாக சைபர் கிரைமிலும் புகார் அளித்துள்ளதாக கூறினார். இந்த போட்டோ வைரல் ஆனதால் எனக்கு நிறைய பேர் போன் பண்ணி கேட்கிறார்கள். இதனால் நான்கு நாட்கள் எனக்கு தூக்கமே வரல. என் ஊர்பக்கம் உள்ள ஒரு யூடியூப் சேனல்காரன் தான், இதுபோன்ற வேலைகளை செய்கிறான். இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவதால் சம்பந்தப்பட்டவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என ஆதங்கத்துடன் பேட்டியளித்துள்ளார்.

55
Stalin Muthu Family Photo

அதுமட்டுமின்றி நடிகையுடன் கிசுகிசு என செய்தி வெளியான பின்னர் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தன்னுடைய மனைவியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்டாலின் முத்து. தன் மனைவி மற்றும் மகன்களுடன் ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா சென்றதாக குறிப்பிட்டு அந்த பதிவை போட்டிருக்கிறார் ஸ்டாலின். அந்த புகைப்படத்தில் அவரது மகன்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய பசங்க இருக்காங்களா என ஆச்சர்யத்துடன் கேட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Pandian Stores: அரசி மீது வந்த சந்தேகம்; சுகன்யா சொன்ன வார்த்தை - உள்ளே வந்த மீனா என்ன நடக்கும்?

Read more Photos on
click me!

Recommended Stories