சங்கர் மகாதேவன் பாடிய ‘இந்த’ 3 மாஸ்டர் பீஸ் பாடல்களும் ஒரே நாள் இரவில் உருவானதா?

Published : Mar 04, 2025, 09:56 AM ISTUpdated : Mar 04, 2025, 09:57 AM IST

பாடகர் சங்கர் மகாதேவன், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த மூன்று மாஸ்டர் பீஸ் பாடல்களை ஒரே நாள் இரவில் பாடிய சம்பவம் பற்றி பார்க்கலாம்.

PREV
14
சங்கர் மகாதேவன் பாடிய ‘இந்த’ 3 மாஸ்டர் பீஸ் பாடல்களும் ஒரே நாள் இரவில் உருவானதா?

Shankar Mahadevan Songs : சங்கர் மகாதேவன் தமிழ் சினிமாவில் பல பிளாக்பஸ்டர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். அதில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அவர் பாடி ஹாட்ரிக் ஹிட்டடித்த பாடல்களை பற்றி பார்க்கலாம்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த மின்சார கனவு படத்தின் மூலம் பாடகராக தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தவர் சங்கர் மகாதேவன். பின்னர் இளையராஜா, தேவா, மணிசர்மா, யுவன் சங்கர் ராஜா, எஸ்.ஏ.ராஜ்குமார் என தொடர்ந்து பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய இவர், இசையமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு இசையமைத்தது சங்கர் மகாதேவன் தான். இவர் ஒரே நாள் இரவில் மூன்று மாஸ்டர் பீஸ் பாடல்களை பாடி இருக்கிறார். அதில் ஒரு பாடலுக்கு தேசிய விருதும் கிடைத்திருக்கிறது. இதில் ஹைலைட் என்னவென்றால் அந்த மூன்று பாடல்களுக்கும் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைத்து இருந்தார்

24
என்ன சொல்லப் போகிறாய்

ராஜீவ் மேனன் இயக்கத்தில் அஜித்குமார், மம்முட்டி, ஐஸ்வர்யா ராய் நடிப்பில் கடந்த 2000ம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களில் அதிகம் விரும்பி கேட்கப்பட்ட பாடல் என்றால் அது சங்கர் மகாதேவன் பாடிய ‘என்ன சொல்லப் போகிறாய்’ பாடல் தான். இப்பாடலுக்காக சங்கர் மகாதேவனுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இதையும் படியுங்கள்... மகா கும்பமேளா 2025: பாடல்கள் மூலம் பக்தர்களை கவர்ந்த சங்கர் மகாதேவன்!

34
வராக நதிக்கரையோரம்

ஏ.ஆர்.ரகுமான் இசையில் ரகுமான் நடிப்பில் வெளியான படம் சங்கமம். இப்படம் கிராமிய இசைக்காகவே பெரிதும் கொண்டாடப்பட்டது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தன. அதில் வராக நதிக்கரையோரம் என்கிற பாடலை சங்கர் மகாதேவன் தான் பாடி இருந்தார். அந்த பாடல் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது என்றால் அதற்கு சங்கர் மகாதேவனின் குரலும் ஒரு காரணம்.

44
தனியே தன்னந்தனியே

ஏ.ஆர்.ரகுமான் இசையில் சங்கர் மகாதேவன் பாடிய மற்றுமொரு மாஸ்டர் பீஸ் பாடல் தான் இந்த ‘தனியே தன்னந்தனியே’ பாட்டு. இப்பாடல் ரிதம் படத்தில் இடம்பெற்று இருந்தது. இப்பாடலை பாடியது மட்டுமின்றி இதில் நடித்தும் இருந்தார் சங்கர் மகாதேவன். இந்த மூன்று பாடல்கள் தான் ஒரே நாள் இரவில் பாடி இருக்கிறார் சங்கர் மகாதேவன். இந்த பாடல்கள் அனைத்தும் அவரின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...  TTF வாசனின் IPL படத்தில் இப்படி ஒரு பாடலா? கேட்டதும் மெர்சலான சங்கர் மகாதேவன்

Read more Photos on
click me!

Recommended Stories