அசைவம்னாலே அலர்ஜியாம்; நான்-வெஜ் பார்த்தாலே தெறித்தோடும் 5 கோலிவுட் ஸ்டார்ஸ்!

Published : Mar 04, 2025, 07:51 AM ISTUpdated : Mar 04, 2025, 07:54 AM IST

அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் கோலிவுட் பிரபலங்கள் சிலர் சுத்த சைவமாக இருக்கிறார்கள். அவர்கள் யார்... யார் என்பதை பார்க்கலாம்.

PREV
16
அசைவம்னாலே அலர்ஜியாம்; நான்-வெஜ் பார்த்தாலே தெறித்தோடும் 5 கோலிவுட் ஸ்டார்ஸ்!

Kollywood Stars Who Hate non veg : தமிழ் சினிமா பிரபலங்களான தனுஷ், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட சிலர் சுத்த சைவமாக இருந்து வருகிறார்கள். அது ஏன் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மனிதன் சம்பாதிப்பதே தான் விருப்பப்படும் உணவுகளை சாப்பிடத் தான். ஆனால் கோடி கோடியாய் சம்பாதித்தும் அசைவ உணவுகளை சாப்பிடவே மாட்டேன் என்கிற முடிவில் சில நடிகர், நடிகைகள் தீர்க்கமாக இருக்கிறார்கள். சிலர் இடையே சைவத்துக்கு மாறினாலும், சிலரோ ஆரம்பத்தில் இருந்து அசைவம் சாப்பிட மாட்டேன் என்கிற முடிவோடு இருந்து வருகிறார்கள். அதில் டாப் 5 சினிமா பிரபலங்களை பற்றி தான் தற்போது பார்க்க உள்ளோம்.

26
தனுஷ்

உருவ கிண்டல்களை எல்லாம் தாண்டி இன்று இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகராக உருவெடுத்து இருக்கிறார் தனுஷ். இவருக்கு அசைவ உணவுகள் என்றால் அலர்ஜியாம். அதனால் அதனை சுத்தமாக தவிர்த்து விட்டாராம். அதுதவிர எண்ணெய்யில் பொரித்த உணவுகளை சாப்பிடமாட்டாராம் தனுஷ். அவருக்கு வீட்டில் சமைத்த உணவு தான் பிடிக்குமாம். அதிலும் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவை தனுஷின் பேவரைட்டாம். சர்க்கரை கலந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ள மாட்டாராம் தனுஷ். மேலும் அவருக்கு அடிக்கடி சூப் குடிக்கும் பழக்கமும் உள்ளதாம்.

36
ரஜினிகாந்த்

ஒரு காலத்தில் தீவிர அசைவ பிரியராக இருந்தவர் ரஜினிகாந்த். மீன் குழம்பு, கருவாடு என்றால் ரஜினிக்கு அம்புட்டு பிரியமாம். ஆனால் உடல்நலனை கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சுத்த சைவமாக மாறினார் ரஜினிகாந்த். போகப்போக அசைவ உணவை எடுத்துக் கொள்ள வேண்டாம் என பிறருக்கு அட்வைஸ் பண்ணும் அளவுக்கு சைவ உணவுகளுக்கு அடிக்ட் ஆகிவிட்டாராம். அவருக்கு அடிக்கடி காய்கறி சாலட் சாப்பிடுவது பிடிக்குமாம்.

இதையும் படியுங்கள்... ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்த 3 படங்கள் இதுதானாம்; லிஸ்ட்ல அவர் படம் ஒன்னுகூட இல்லையே!

46
ராஷ்மிகா

பான் இந்தியா அளவில் பிசியான நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு அசைவம் என்றால் சுத்தமாக பிடிக்காதாம். அப்படி இருந்து சிக்கன் விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். இவருக்காக சைவ உணவை அசைவ உணவுபோல் தயார் செய்து அந்த சிக்கன் விளம்பரத்தை எடுத்தார்களாம். அந்த அளவுக்கு அசைவ உணவை வெறுக்கும் ராஷ்மிகா, தன் உடலை பிட்டாக வைத்துக்கொள்ள கீரை வகைகளை அதிகம் உட்கொள்வாராம்.

56
மாதவன்

மாதவன் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் ஆக கொண்டாடப்பட்டவர். இவர் உடல் அமைப்பை பார்த்து இவர் அசைவம் சாப்பிடுபவர் என எண்ணிவிட வேண்டாம். இவர் சுத்த சைவம். பிறந்ததில் இருந்தே அசைவத்தை தொட்டதில்லை. சைவத்தில் எந்த உணவாக இருந்தாலும் அதனை நன்று மென்று சாப்பிட்டதால் உடல் எடையை குறைத்தாராம் மாதவன்.

66
தமன்னா

ரசிகர்களால் மில்க் பியூட்டி என கொண்டாடப்படுபவர் தமன்னா. இவர் தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க இவரின் உணவு பழக்க வழக்கங்களும் ஒரு காரணமாம். அதிலும் அசைவ உணவில் இருந்து சைவத்திற்கு மாறிய பின்னர் இன்னும் இளமையாக காட்சியளிப்பதால் அதையே பாலோ செய்து வருகிறாராம் தமன்னா.

இதையும் படியுங்கள்... கிரிப்டோகரன்சி மோசடி வழக்கு: எனக்கும் அதுக்கும் எந்த தொடர்பும் இல்லை; தமன்னா விளக்கம்!

Read more Photos on
click me!

Recommended Stories