Pandian Stores: அரசி விசயத்தில் முக்கிய முடிவு எடுத்த பாண்டியன் எடுத்த முடிவு! கோமதியின் ரியாக்சன் என்ன?
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 435ஆவது எபிசோடானது பாண்டியன் வீட்டிற்கு வருவதோடு தொடங்குகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 435ஆவது எபிசோடானது பாண்டியன் வீட்டிற்கு வருவதோடு தொடங்குகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடானது பாண்டியனை வீட்டிற்கு அழைத்து வருவது உடன் தொடங்கியுள்ளது. பாண்டியனை பார்த்ததும் போட்ட கோலத்தை கூட அரைகுறையாக விட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார் கோமதி. கணவரை கண்டதுமே கோமதி கதறி அழ, எல்லா தப்பும் நான் தான் செய்தேன். நீங்கள் எதற்கு வீட்டை விட்டு போனீங்க என்று கேட்கிறார்.
எங்க இருந்தார் என்று மகன்களிடம் கேட்கவே, அதற்கு பழனிவேல் கடையில் இருந்தார். கடையில் குடோனில் இருந்தார் என்று கூறினார். என்னால் தான் எல்லா பிரச்சனையும், இனிமேல் நீங்கள் எங்கும் போகாதீர்கள் என்று கணவரை கோமதி சமாதானம் செய்தார். அதன் பிறகு சரவணன் எனக்கு ஆத்திரம் அடங்கவில்லை. அவனை எதாவது செய்ய வேண்டும் என்று சரவணன் துடிக்கிறார். கதிரும் அதற்கேற்ப ஆதங்கப்படுகிறார்.
செந்திலும் ரெடியாகவே இருக்கிறார். அதற்கு பழனிவேல் மாப்பிளைங்கிளா நீங்கள் எல்லோருமே சும்மா இருங்க. இப்போது தான் வீட்டுக்கே சென்று அடிச்சு வெளுத்திருக்கிறோம். இது அரசியோட விஷயம் எதையும் பொறுமையாகத்தான் டீல் பண்ண வேண்டும் என்று கூறுகிறார். இனிமேல் அவன் அரசி விசயத்தில் தலையிட மாட்டான் என்று ஆளாளுக்கு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இறுதியாக பாண்டியன் தனது மகள் அரசி விஷயத்தில் ஒரு முடிவு எடுத்திருக்கிறார். அதைப் பற்றி கோமதியிடம் பேசினார். அதற்கு கோமதி நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம் தான் என்று கூறினார். கடைசியில் தங்கமயில் பாண்டியனுக்கு டீ போட்டு கொண்டு வந்து கொடுக்கிறார். அரசி அப்பா என்று பாண்டியனை கூப்பிட அதோடு இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் முடிவடைகிறது.