
கவர்ச்சி நடிகையான சோனா, சமீப காலமாக தமிழ் திரைப்படங்களில் பெரிதாக தலைகாட்டவில்லை என்றாலும், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது ஸ்மோக் என்கிற வெப் சீரிஸை இயக்கி - தயாரித்துள்ளார். இதில் நடிகை சோனா அவருக்கு நடந்த சம்பவங்களை வைத்தே எடுத்துள்ளார். 2010 முதல் 2015 வரை இடையே ஆன காலகட்டத்தில் தனக்கு நேர்ந்த விஷயங்களை பற்றியே சோனா படமாக்கியுள்ளார்.
இந்த வெப் சீரிஸ் எடுக்க துவங்கியதில் இருந்தே பல சவால்களை தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்து வந்த சோனா, ஒருவழியாக எடுத்து முடித்த பின்னரும் பல பிரச்சனைகளை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய முன்னாள் மேனேஜர் சங்கர் பணத்தை வாங்கி கொண்டு, தொழிலாளர்களுக்கு கொடுக்காமல் ஏமாற்றிய நிலையில், தற்போது சோனா படமாக்கிய வெப் சீரிஸின் சில முக்கிய காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்கையும் பால கோபி என்பவரிடம் கொடுத்த நிலையில் அவர் கொடுக்க மறுப்பதாக தற்போது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது, "வணக்கம் நான் பெப்சி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். ஒரு வருடம் முன்பு என்னுடைய சூட்டிங்கை நிறுத்தினார்கள் என்னிடம் பணியாற்றிய மேனேஜர் ஏமாற்றி விட்டார் என்று... இதைத் தொடர்ந்து என்னால் முடிந்தவரை நான் போராடினேன். ஆனால் என்னால் அந்த பிரச்னையை சரி செய்ய முடியவில்லை. இதை தொடர்ந்து பெப்சிக்கு வந்தேன், மேனேஜர் சங்கத்தில் அவர் மீது புகார் கொடுக்கச் சொன்னார்கள். மாற்றி மாற்றி எங்கும் அங்கும் அனுப்பினார்கள். பிறகு யாரும் என்னுடைய போனை எடுப்பதில்லை.
அதே போல் பால கோபி என்பவரும், என்னை ஏமாற்றிய சங்கர் என்பவரும் பலருக்கு என்னுடைய அட்ரஸ் மற்றும் போன் நம்பரை கொடுத்து என் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள். நான் தனியாக இருக்கும் பெண். என்னுடைய வீட்டில் இரவில் வந்து கதவை தட்டுவது எங்கு போனாலும் மிரட்டுவது அதெல்லாம் ஓரளவுக்கு மேனேஜ் செய்து இதுவரை வந்தேன். எப்படியும் நான் இயக்கியுள்ள 'ஸ்மோக்' வெப் சீரிஸை ரிலீஸ் செய்து விடலாம் என நினைத்தேன். ஆனால் இப்போது ஹார்ட் டிஸ்கை பிடித்து வைத்துக்கொண்டு, அதை கொடுக்க மறுக்கின்றனர் இதை கேட்டால் மீண்டும் இரண்டு மடங்காக பணம் கொடு என சொல்கிறார்கள் என்று 40,000 சம்மதித்தால் இப்போது 1 லட்சத்து 20 ஆயிரம் கேட்கிறார்கள். அதற்காக போன் செய்து பேசினால் நான் பிஸியா இருக்கிறேன் என நக்கல் பண்ணிக்கிட்டு இருக்காங்க.
பால கோபி நீதான் எல்லாத்துக்கும் போலீஸ் கிட்ட போவியே, இதுக்கும் போலீஸ் ஸ்டேஷன்ல போய் புகார் கொடு என சொல்கிறார். அதை போல் நீ எங்கு போனாலும் இங்கு தான் வர வேண்டும் என கூறி மிரட்டுகிறார்.
நான் முடிந்தவரை போராடிவிட்டேன். நான் கடைசியாக ஒரே ஒருமுறை வாயை தொறந்து என்னை இப்படி செய்கிறார்கள் என போலீஸ் ஸ்டேஷனில் சொன்னதுக்கே பத்து வருடமாக என்னால் வேலை செய்ய முடியவில்லை. திரும்பவும் அப்படி ஏதாவது சொன்னால் மீண்டும் இன்னொரு பத்து வருஷத்துக்கு வேலை செய்ய முடியாது. எனக்கு சங்கர் இங்க வரணும். எதற்கு அவரை இவ்வளவு பேர் பாதுகாக்கிறார்கள் என தெரியவில்லை.
என்னுடைய பக்கத்தில் இருந்து படத்திற்கு தேவையான அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டேன். ஒரு ஹார்ட் டிஸ்கை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு, எந்த குப்பையில கடக்குதுன்னு தெரியல அதைத் தேடணும் அப்படி என்று பேசுகின்றனர். நன் யாரிடமும் பிரச்சனை செய்ய வரவில்லை. எனக்கு மேனேஜர் சங்கர் இங்கு வரணும். என் பணம் எனக்கு வந்தாகணும். அந்த சங்கர் என்கிற ஆள் என்ன அவ்வளவு பெரிய ஆளா? என்னையும் ஏமாற்றிவிட்டு மற்ற தொழிலாளர்களுக்கும் பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டு உட்கார்ந்து இருக்கிறார் என தன்னுடைய ஆதங்கத்தை சோனா வெளிப்படுத்தியுள்ளார்.
சினிமாவில், சினிமா தொழிலாளர்களுக்கு பிரச்சனை என்றால் டொனேஷன் ஆக பணம் கொடுப்பவர்கள் நாங்கள் எல்லாம் பைத்தியக்காரர்களா? எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் செய்ய வேண்டும் என்கிற ஐடியா இல்லை. நான் கேட்பது என்னுடைய பொருளை தான். வேற எதுவுமே எனக்கு வேண்டாம். நான் இங்கு யாரிடமும் சண்டை போடவும் வரவில்லை. இங்கு வந்து உண்ணாவிரதம் பண்ணவும் வரவில்லை. நான் இரவு வீட்டுக்கு போய் தூங்கிட்டு காலையில திரும்பவும் வந்து இங்கு தான் உட்காருவேன். என்னுடைய ஹார்ட் டிஸ்க் வரும் வரை என்னால் எதுவும் பண்ண முடியாது. அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளது. எனக்கு ஆதரவு கொடுங்கள் என தெரிவித்துள்ளார். சோனா பெப்சி முன்பு இப்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.