தனது காதலை முதலில் அவரிடம் தெரிவித்ததாகவும், இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் ஏற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். நாஞ்சில் விஜயன் திருமணம் செய்து கொள்ள அனுமதி கேட்டபோது, தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்பதால், அவர் வேறு திருமணம் செய்து கொள்ளலாம் என்று தான் அனுமதி அளித்ததாக வைஷு கூறினார். நான் திருநங்கை என்பது இப்போதுதான் அவருக்குத் தெரிந்ததா? நாங்கள் பல நாட்கள் ஒரே ரூமில் கணவன் மனைவி போல வாழ்ந்தோம். அப்போது நான் திருநங்கை என்பது அவருக்குத் தெரியவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.