Siragadikka Aasai Serial Today 796th Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து தனக்கு சிறு வயதில் நடந்த கொடுமைகளை பற்றி மீனாவிடம் என்னவெல்லாம் சொன்னார் என்பதை பார்க்கலாம்.
விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் கிரீஷ் பள்ளியில் தன்னுடன் படிக்கும் அஜய் என்கிற மாணவன் உடன் சண்டைபோட்டு ஸ்கூலை விட்டு ஓடி வந்ததால் அடுத்தடுத்து எதிர்பாரா சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. அதில் ஒரு பகுதியாக கிரீஷை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றும் அஜய்யின் தந்தை சொல்ல, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முத்து, அவரிடம் கெஞ்சி அந்த முடிவை கைவிட வைக்கிறார். இதன்பின்னர் வீட்டுக்கு வந்து கிரீஷுக்கு நடந்தவற்றை கூறும் முத்துவிடம் மனோஜ் வாக்குவாதம் செய்கிறார். அதன்பின் என்ன ஆனது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
24
மனோஜ் - முத்து மோதல்
முத்துவிடம் இருந்து தான் கிரீஷ் ரெளடித்தனத்தை கற்றிருப்பான் என்று விஜயா சொல்ல, அதற்கு மனோஜ், ஆமா அம்மா, முத்து மாதிரி தான் அவனும் மாறப்போறான் பாரு. இவன மாதிரியே அவனும் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு போகப் போறான் பாருங்க என சொன்னதும் கடுப்பான முத்து, மனோஜின் கழுத்தை நெரித்து நான் ரெளடியாடா என கேட்கிறார். பின்னர் அனைவரும் இருவரையும் பிரித்துவிடுகிறார்கள். இதையடுத்து பேசும் மனோஜ், நான் என்ன தப்பாவா சொன்னேன். இவனும் இந்த மாதிரி கிரிமினல் வேலைகளை எல்லாம் செஞ்சுட்டு சீர்திருத்த பள்ளில இருந்தவன் தான என சொல்கிறார்.
34
மனோஜுக்கு அறைவிட்ட அண்ணாமலை
இதைக் கேட்டு டென்ஷன் ஆன அண்ணாமலை, மனோஜுக்கு பளார் என அறைவிடுகிறார். ஏன் அவனை அடிச்சீங்க என விஜய கேட்க, வாயை திறந்தா உனக்கும் அறை விழும் என எச்சரிக்கிறார் அண்ணாமலை. பழைய விஷயத்தை கிளறினால் இந்த வீடு வீடா இருக்காது. பேசாம இரு, படிப்புக்கு ஏத்த அறிவு உன்கிட்ட கொஞ்சம் கூட இல்லையா... அவன் வாழ்க்கையில பாதி வருஷத்தை நாசம் ஆக்குனது நீயும், உன்னுடைய அம்மாவும் தான் என மனோஜை திட்டுகிறார் அண்ணாமலை. பின்னர் அனைவரும் அங்கிருந்து தங்கள் அறைக்கு சென்றுவிடுகிறார்கள்.
அதன்பின்னர் முத்துவை தனியாக அழைத்து செல்லும் மீனா, கண்டிப்பா உங்களோட வாழ்க்கையில ஏதோ நடந்திருக்கு, அப்படி என்ன தான் சின்ன வயசுல நடந்தது என கேட்டதும், பிளாஷ்பேக்கை சொல்கிறார் முத்து. ஜோசியர் ஒருவர் விஜயாவிடம் உங்க ரெண்டாவது பையன் உங்ககூட வீட்டில் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் உங்களுக்கு ஆபத்து இருப்பதாக சொல்கிறார். இதனால் முத்துவை சிறுவயதிலேயே அவனது பாட்டி வீட்டில் விட்டுவிடுகிறார் விஜயா. முத்து எவ்வளவோ கெஞ்சியும் அவனை தனியே விட்டுச் செல்கிறார். இதையடுத்து என்ன ஆனது? முத்து எதற்காக சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு சென்றார்? என்பது இனி வரும் எபிசோடுகளில் தெரியவரும்.