Indraja Robo Shankar : நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, இன்ஸ்டாவில் பதிவிடும் வீடியோக்கள் சர்ச்சையில் சிக்குவதுண்டு. அந்த வகையில் தற்போது பதிவிட்டுள்ள வீடியோ கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
நடிகர் ரோபோ சங்கரைப் போல் அவரது மகள் இந்திரஜாவும் சினிமாவில் நடித்து பேமஸ் ஆனார். குறிப்பாக விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்த பின்னர் இவருக்கு மவுசு அதிகரித்தது. பின்னர் கார்த்தியின் விருமன் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்த இந்திரஜா, சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தன்னுடைய மாமாவை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். இவர் கார்த்திக் என்பவரை கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. திருமணத்துக்கு பின்னர் இன்ஸ்டாகிராமில் ஏராளமான புரமோஷன் வீடியோக்களை பதிவிட்டு அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
24
இந்திரஜாவின் லேட்டஸ்ட் சர்ச்சை
சமீபத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சியை மேம்படுத்த ஒரு பள்ளி இருப்பதாக கூறி இவர் பதிவிட்ட வீடியோ மிகவும் வைரல் ஆனதோடு, கடும் விமர்சனத்தையும் எதிர்கொண்டது. இதனால் கடந்த சில மாதங்களாக அதுபோன்ற வீடியோக்களை பதிவிடாமல் இருந்து வந்த இந்திரஜா, தற்போது சாமிக்கே புரமோஷன் செய்து வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அவரின் இந்த வீடியோவுக்கு அதிகளவில் நெகடிவ் கமெண்ட்டுகள் வந்ததால், கமெண்ட் செக்சனை ஆஃப் செய்து வைத்திருக்கிறார் இந்திரஜா.
34
இந்திரஜாவின் வராகி அம்மன் வீடியோ வைரல்
திருப்பூரில் இருந்து அவினாசி செல்லும் வழியில் வஞ்சிப்பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுயம்பு வராகி தெய்வீக சித்தர் பீடத்திற்கு சென்றிருந்த வீடியோவை பதிவிட்டுள்ள இந்திரஜா, சித்தரோட அருள்வாக்கால் தேங்காயும், குழவிக்கல்லும் சுத்தும் என்பதை கேள்விப்பட்டதால் தானும் தன்னுடைய கணவரும் அங்கு சென்றதாக அந்த வீடியோவில் கூறி உள்ள இந்திரஜா, அங்கு வராகி அம்மன் சுயம்புவாகவே உருவாகி இருப்பதாகவும், அங்கு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அருள்வாக்கு கிடையாது என்பதால், தான் வெள்ளிக்கிழமை அங்கு சென்றதாக இந்திரஜா கூறி உள்ளார்.
அங்கு சென்று கோமாதா பூஜையில் கலந்துகொண்ட இந்திரஜா, அந்த சித்தரிடம் அருள்வாக்கு கேட்பதற்கு நிறைய அரசியல் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் வருகை தருவதாக கூறி இருக்கிறார். அங்கு அருள்வாக்கு கேட்க, கேட்க, தேங்காவும், குழவிக்கல்லும் சுத்தும்போது தங்களுக்கு உடம்பே மெய்சிலிர்த்து போனதாக பில்டப் விட்டுள்ளார் இந்திரஜா. இந்த வராகி அம்மன் கோவில் கட்டுவதற்காக தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கூறி ஒரு க்யூ ஆர் கோடையும் போட்டிருக்கிறார் இந்திரஜா. இதைப்பார்த்த நெட்டிசன்கள், இந்தப் பொண்ணு என்ன சாமிக்கே புரமோஷன் பண்ணிக்கிட்டு இருக்கு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.