வெள்ளித்திரையில் முன்னணி இயக்குனராக வெற்றிக்கொடி நாட்ட முடியாத சில இயக்குனர்கள் கூட, சின்னத்திரையில், மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளனர். அந்த வகையில் நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யாவை ஹீரோவாக வைத்து, 'நியூட்டன் 7 ஆம் விதி' என்கிற படத்தை இயக்கியவர் தாய் செல்வம். 2009 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் எதிர்பாத்த வெற்றியை பெறாமல் தோல்வியை தழுவியது.