ரீ-ரிலீஸிலும் படுதோல்வி... பாபா படத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன் - கடுப்பான ரஜினி ரசிகர்கள்

First Published Dec 15, 2022, 10:53 AM IST

பாபா படத்தை டிஜிட்டலில் மெருகேற்றி, கிளைமாக்ஸ் உள்பட சில காட்சிகளை மாற்றியமைத்து ரஜினியின் பிறந்தநாளையொட்டி கடந்த வாரம் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்தனர். 

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு ரிலீசான படம் பாபா. ரஜினியின் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களான பாட்ஷா, அண்ணாமலை ஆகிய திரைப்படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா தான் இந்த படத்தையும் இயக்கி இருந்தார். இதில் ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

இப்படத்தின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இதனை ரஜினிகாந்த் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான லோட்டஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தார். அதுமட்டுமின்றி இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதி இருந்ததும் ரஜினிகாந்த் தான். இதன் காரணமாகவே இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதையெல்லாம் பூர்த்தி செய்யாததால் இப்படம் தோல்வியடைந்தது.

இதையும் படியுங்கள்... மகள் ஐஸ்வர்யா உடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

பாபா படம் தோல்வியடைந்தாலும், அது இன்று வரை ரஜினியின் மனதுக்கு நெருக்கமான படமாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக பாபா படத்தை டிஜிட்டலில் மெருகேற்றி, கிளைமாக்ஸ் உள்பட சில காட்சிகளை மாற்றியமைத்து ரஜினியின் பிறந்தநாளையொட்டி கடந்த வாரம் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்தனர். இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினாலும், பொதுமக்கள் இப்படத்தை எதிர்பார்த்த அளவு கொண்டாடவில்லை.

இந்நிலையில், பாபா படம் ரீ-ரிலீஸிலும் படுதோல்வி அடைந்துள்ளதாக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். இளம் தலைமுறையினர் இப்படத்தை ரிஜெக்ட் செய்துவிட்டார்கள். ரஜினியின் தனிப்பட்ட நம்பிக்கை, கிரிஞ்சான அட்வைஸ் மற்றும் காமெடியான அரசியல் பஞ்ச் வசனங்கள் அடங்கிய இப்படத்தை யாரும் பார்க்க விரும்பவில்லை என கடுமையாக சாடி உள்ளார். இதைப்பார்த்து கடுப்பான ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை திட்டித்தீர்த்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... காந்தாரா முதல் லவ் டுடே வரை... கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வசூலை வாரிக்குவித்த திரைப்படங்கள் ஒரு பார்வை

click me!