கோலிவுட்டை பொறுத்தவரை இந்த பட்டியலில் முன்னிலையில் உள்ளது நடிகர் விஜய் தான். அவர் இந்த லிஸ்ட்டில் 15-வது இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு 19-வது இடத்தில் இருந்த விஜய், இந்த ஆண்டு நான்கு இடங்கள் முன்னேறி உள்ளார். இந்த பட்டியலில் உலகம் முழுவதும் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியை நடிகர் விஜய் பின்னுக்கு தள்ளி உள்ளார். தோனி 24-வது இடத்தில் உள்ளார்.
இதுதவிர கோலிவுட் பிரபலங்களான காஜல் அகர்வால் 13-வது இடத்திலும், சமந்தா 17-வது இடத்திலும், நயன்தாரா 33-வது இடத்திலும், சூர்யா 45-வது இடத்திலும், கீர்த்தி சுரேஷ் 62-வது இடத்திலும், ரஜினிகாந்த் 68-வது இடத்திலும், அஜித்குமார் 78-வது இடத்திலும், சாய் பல்லவி 89-வது இடத்திலும் உள்ளனர். பாலிவுட் பிரபலங்களான கத்ரீனா கைஃப், ஆலியா பட், சல்மான் சான், ஷாருக்கான் ஆகியோர் டாப் 10-ல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது எனக்கு மகிழ்ச்சி… நடிகர் விஷால் கருத்து!!