கடல் கன்னி போன்ற உடையில்... கவர்ச்சி தரிசனம் கொடுத்த ஜான்வி கபூர்! கிளாமரில் எல்லை தாண்டிய ஹாட் போட்டோ ஷூட்!
பாலிவுட் திரையுலகின் இளம் நடிகையான ஜான்வி கபூர், கடல் கன்னி போன்ற உடையில் வித்யாசமான போட்டோஷூட் செய்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி நடிகையாக இருந்து, பாலிவுட் திரை உலகில் நுழைந்து லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை கைப்பற்றியவர் நடிகை ஸ்ரீதேவி.
இவருடைய மூத்த மகளான ஜான்வி கபூர், தற்போது பாலிவுட் திரையுலகில் படு பிஸியான நடிகையாக வலம் வருகிறார். இந்தியில் தொடர்ந்து கதைக்கும், கதாபாத்திரத்திற்கும், முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
போன முறை பட்டதே போதும்..! இந்த முறை உஷாரான விஜய்... எந்த விஷயத்தில் தெரியுமா?
ஜான்வி கபூர், ஏற்கனவே மற்ற மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, படங்களின் இந்தி ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டுவதால், தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்தும் கொடுத்து எடுக்கப்படும் பாடல் தான் இவருடைய முதல் தேர்வாக இருந்து வருகிறது.
அந்த வகையில் ஜான்வி கபூர், நடிகை நயன்தாரா நடிப்பில் தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற 'கோலமாவு கோகிலா' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்ட 'குட்லக் ஜெர்ரி' படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஜான்வி கபூரின் வேறுவிதமான நடிப்பை வெளிக்காட்டியது.
இதைத்தொடர்ந்து, சமீபத்தில் மலையாள திரையுலகில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'ஹெலன்' படத்தின் ரீமைக்காக எடுக்கப்பட்ட மிலி படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படமாக அமைந்தது. இந்த படத்திற்காக முதல் முறையாக தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலேயே ஜான்வி கபூர் நடித்திருந்தார்.
மேலும் விரைவில் தமிழ் திரையுலகிலும் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதியின் தீவிர ரசிகையான ஜான்வி கபூர், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'நானும் ரவுடி தான்' படத்தை 100 முறை பார்த்துவிட்டு, விஜய் சேதுபதிக்கு போன் செய்து அவருடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டதாக கூறப்படுகிறது.
எனவே விரைவில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜான்வி கபூர் கடல் கன்னியாக மாறி கவர்ச்சியை அள்ளித் தெளிக்கும் புகைப்படங்கள் வேறு லெவலுக்கு வைரல் ஆகி வருகிறது
திருமணமான ஒரே வாரத்தில்... நடிகை ஹன்சிகா வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!