போன முறை பட்டதே போதும்..! இந்த முறை உஷாரான விஜய்... எந்த விஷயத்தில் தெரியுமா?
நடிகர் விஜய் போன முறை காரில் கருப்பு நிற சன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததால், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த முறை முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
நடிகர் விஜய் நேற்று சென்னை பனையூரில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில், விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்களையும் ரசிகர்களையும் சந்தித்தார். மேலும் தன்னை சந்திக்க வந்த ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்திய விஜய், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது மட்டுமின்றி, விஜய் மக்கள் இயக்கம் செயல்பாடுகள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
நேற்றைய தினம் ரசிகர்களை சந்திப்பதற்காக ,விஜய் கருப்பு நிற பேண்ட் மற்றும் கருப்பு நிற ஷர்ட் அணிந்து மிகவும் ஸ்டைலிஷான லுக்கில் விஜய் வந்தது, மற்றும் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்நிலையில் விஜய் கடந்த முறை செய்த அந்த தவறை இந்த முறை செய்யாமல் மிகவும் உஷாராக நடந்து கொண்டதாக நெட்டிசன்கள் தற்போது விஜயின் கார் புகைப்படத்தை பகிர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். கடந்த முறை விஜய், ரசிகர்களை சந்திக்க வந்தபோது அவருடைய காரில் தடை செய்யப்பட்ட கருப்பு நிற சன் ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததால்... மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவருக்கு சுமார் 100 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
எனவே இந்த முறை தன்னுடைய காரில் ஒட்டப்பட்டிருந்த சன் ஸ்டிக்கர் நிறத்தை விஜய் மாற்றிவிட்டதாக அந்த காரின் புகைப்படத்தை பதிவு செய்து நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
திருமணமான ஒரே வாரத்தில்... நடிகை ஹன்சிகா வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில், 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. விஜய் திடீர் என தன்னுடைய ரசிகர்களை சந்தித்து பேசி வருவது, படத்திற்கான 'வாரிசு' படத்திற்கான ப்ரோமோஷன் என்றும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.