தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித் - விஜய் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், இவர்களது ரசிகர்கள் எப்போதுமே எலியும், பூனையுமாக தான் இருந்து வருகிறார். இதன்காரணமாகவே இவர்கள் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் ஒன்றாக ரிலீஸ் செய்யப்படுவதில்லை. ஆனால் வருகிற 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய் - அஜித் படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளன.