கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற, 'டாடா' படத்தின் இயக்குனர் கணேஷ் K பாபு-வின் இரண்டாவது படம் இன்று பூஜையுடன் துவங்கியது. MG STUDIOS சார்பில் தயாரிப்பாளர் APV மாறன் உடன் இணைந்து டாடா புகழ் இயக்குநர் கணேஷ் K பாபு, திரைக்கதை எழுதி தயாரிக்க, இயக்குநர் கல்யாண் K ஜெகன் இயக்கத்தில், அறிமுக நடிகர் அஜய் கார்த்தி நடிப்பில் உருவாகும் “ரேவன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு, இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் துவங்கியது.