பிரபல தமிழக கிரிக்கெட் வீரரை கரம் பிடித்த நடிகரின் மகள்! பிரமாண்டமாக நடந்து முடிந்தது திருமணம்!

First Published | Aug 21, 2023, 6:17 PM IST

பிரபல நடிகர் தலைவாசல் விஜய்யின் மகள், ஜெயவீனா மற்றும் தமிழக கிரிக்கெட் வீரர் அபராஜித் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
 

நடிகர் தலைவாசல் விஜய்யின் மகள் ஜெயவீனா, பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பல மெடல்களை வாங்கி குவித்துள்ளவர். ஸ்டேட் மற்றும் இன்டர்நேஷனல் நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டுள்ள இவர், கடந்த ஆண்டு கூட நேப்பால் தலைநகர் காட்மாண்டுவில் நடைபெற்ற தெற்காசிய நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிவாகை சூடினார்.

நீச்சல் விளையாட்டு வீராங்கனையான ஜெயவீனா... கடந்த சில வருடங்களாகவே, தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான அபராஜித் என்பவரை காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி மாதம் மிகவும் எளிமையான முறையில் நடந்தது. 

சினிமா சான்ஸ் தருவதாக முதலில் தாயை பதம் பார்த்த இயக்குனர்..! பின் 18 வயது கூட ஆகாத மகளுக்கும் பாலியல் தொல்லை!

Tap to resize

திருமணம் எப்போது என்கிற தகவல் வெளியாகாத நிலையில், நேற்று ஜெயவீனா - அபராஜித் ஜோடிக்கு சென்னை திருவான்மியூரில், உள்ள திருமண மண்டபத்தில் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து ,முடிந்துள்ளது. இவர்களின் திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகத் தெரிகிறது. அதே போல் பிரபலங்கள் யாரும் கலந்துகொள்ள வில்லை என கூறப்படுகிறது.

விரைவில் பிரபலங்கள் மற்றும் அபராஜித் கிரிக்கெட் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து, ரிசெப்ஷன் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அபராஜித் 17 வயதில் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானவர். இவரின் தந்தை டாக்டர் பாபா தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தவர். அபராஜித் 2012ம் ஆண்டு நடந்த ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர். அதே போல், 2013ம் ஆண்டு நடந்து துலிப் கோப்பைப் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடைத்து வைக்கப்பட்ட அப்பத்தா! கலங்கி நிற்கும் ஜீவானந்தத்தை பார்த்து ஜனனி கூறிய வார்த்தை! எதிர்நீச்சல் அப்டேட்

விளையாட்டு துறையை சேர்ந்த இந்த இருவரும், ஜோடி சேர்ந்துள்ளதற்கு... ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து சமூக வலைதளத்தின் மூலம் 
தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!