திரை உலகில் நடிகையாக ஜொலிக்க வேண்டும் என்கிற ஆசை, சினிமா மீது ஆர்வம் உள்ள நடிகைகளுக்கு இருக்க கூடிய பிரதான ஆசை தான். இந்த சினிமா ஆசையை தூண்டி விட்டு, நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் இளம் பெண்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேட்பதாக அவ்வப்போது பல சர்ச்சைகள் தொடர்ந்து எழுகிறது. பல முன்னணி நடிகைகள் மற்றும் சீரியல் நடிகைகள் பல பேட்டிகளில் இதுகுறித்து வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.
child abuse
மலையாளத்தில் வெளியான 'பைனரி' என்ற திரைப்படத்தை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் ஜாசன் அலி என்பவர். 36 வயதாகும் ஜாசன் அலி அடுத்ததாக தான் இயக்கும் திரைப்படத்தில் இளம் நடிகை ஒருவருக்கு வாய்ப்பு தருவதாக கூறி, அவரை கேரளாவில் உள்ள பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் லார்ஜில் அரை எடுத்து தங்கி, அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பின்னர் இது குறித்து, அந்தப் பெண் தன்னுடைய தாயிடம் போன் செய்து கூறியுள்ளார். இது குறித்து உடனடியாக அந்த பெண்ணின் தாயார் கோயிலாண்டி போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
இந்த விசாரணையின் போது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஜாசிக் அலி வாய்ப்பு தருவதாக அந்த பெண்ணின் தாயாரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இது குறித்து அவர் கொடுத்த புகாரில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறை சென்று பின்னர் வெளியே வந்துள்ளார். அம்மாவை தொடர்ந்து மகளிடமும் நைசாக பேசி... தனியாக அழைத்து ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். இந்த புகார் தொடர்பாக நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த பட்ட ஜாசிக் அலி தற்போது போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மலையாள திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகருடன் காதல்... 4 அபார்ஷன்..! கள்ள காதலனுடன் ஓட்டம்.. 'ஜெயிலர்' பட நடிகை மிர்ணாவின் பகீர் பிளாஷ் பேக்!