தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் தற்போது குஷி திரைப்படம் தயாராகி உள்ளது. சிவா நிர்வாணா இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் சமந்தா. குஷி படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு ரெடியாகி உள்ளது. வருகிற செப்டம்பர் 1-ந் தேதி குஷி திரைப்படம் உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளதால், அதன் புரமோஷன் பணிகளும் பிசியாக நடைபெற்று வருகின்றன.
25
samantha
அந்த வகையில் கடந்த வாரம் ஐதராபாத்தில் நடைபெற்ற குஷி படத்தின் இசை நிகழ்ச்சி வேறலெவலில் ஹிட் ஆனது. அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் திடீரென மேடையில் ஏறி ரொமாண்டிக் நடனமாடியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. அதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேறலெவலில் வைரல் ஆனது.
இந்நிலையில், தற்போது மயோசிடிஸ் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகை சமந்தா, அங்கு ஜாலியாக ஊர் சுற்றி, நண்பர்களோடு அரட்டை அடித்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களையும் நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
45
samantha
அதில் ஒரு புகைப்படத்தில் நடிகை சமந்தா ஜிம்மில் ஆண் நண்பரோடு ஒர்க் அவுட் செய்யும் போது எடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பிட்னஸ் மீதான உங்களுடைய காதல் அமெரிக்கா போயும் விடவில்லையா எனக் கூறி கலாய்த்து வருகின்றனர்.
55
samantha
இதேபோல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற 41-வது இந்திய தின அணிவகுப்பிலும் நடிகை சமந்தா கலந்துகொண்டார். அப்போது சாலையில் ரசிகர்களோடு நடந்து சென்ற சமந்தாவுக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.