ஜெயிலர் ரஜினியின் மகன் வஸந்த் ரவி... கமகமவென ஊருக்கே சாப்பாடு போடும் மிகப்பெரிய தொழிலதிபரின் வாரிசா?

Published : Aug 21, 2023, 01:22 PM IST

ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மகன் கேரக்டரில் நடித்த நடிகர் வஸந்த் ரவி, மிகப்பெரிய தொழிலதிபரின் மகன் என தெரியவந்துள்ளது.

PREV
14
ஜெயிலர் ரஜினியின் மகன் வஸந்த் ரவி... கமகமவென ஊருக்கே சாப்பாடு போடும் மிகப்பெரிய தொழிலதிபரின் வாரிசா?
Rajinikanth, Vasanth Ravi

ராம் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான தரமணி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் வஸந்த் ரவி. முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்து விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற வஸந்த் ரவிக்கு, விஜய் அவார்ட்ஸ், பிலிம்பேர் அவார்ட்ஸ் உள்ளிட்டவற்றில் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதுகளும் கிடைத்தது.

24
Rajinikanth, Vasanth Ravi

தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கும் வஸந்த் ரவி, தரமணிக்கு அடுத்ததாக நடித்த திரைப்படம் தான் ராக்கி. அருண் மாதேஸ்வரன் இயக்கிய இப்படத்தில் பாரதிராஜா உள்பட ஏராளமானோர் நடித்திருந்தனர். இப்படத்தை நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடியின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தான் ரிலீஸ் செய்தது. இப்படமும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது.

இதையும் படியுங்கள்... ஒரே ஆண்டில் முடிந்த திருமண வாழ்க்கை... 50 வயசுல அடுத்த கல்யாணமா? ஓப்பனாக சொன்ன நடிகை சுகன்யா

34
Rajinikanth, Vasanth Ravi

ராக்கி படத்துக்கு பின் வஸந்த் ரவி நடித்த ஹாரர் திரைப்படம் தான் அஸ்வின்ஸ். இப்படம் கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து வஸந்த் ரவிக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம். நெல்சன் இயக்கிய இப்படத்தில் நடிகர் ரஜினியின் மகனாக நடித்திருந்தார் வஸந்த் ரவி. ஆரம்பத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் இவர், கிளைமாக்ஸில் வில்லனாக மாறி டுவிஸ்ட் கொடுப்பார். இவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

44
Rajinikanth, Vasanth Ravi

இந்நிலையில், நடிகர் வஸந்த் ரவி, மிகப்பெரிய தொழிலதிபரின் மகன் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இவரது தந்தை நம்ம வீடு வஸந்த பவன் என்கிற பெயரில் ஹோட்டல் பிசினஸ் நடத்தி வருகிறார். இவருக்கு உலகளவில் கிளைகளும் உள்ளன. சென்னையில் மட்டுமே இவர்களுக்கு 14 கிளைகள் உள்ளன. இதுதவிர துபாய், லண்டன், ஓமன், கத்தார் போன்ற நாடுகளிலும் வெற்றிகரமாக ஓட்டல் பிசினஸ் நடத்தி வருகின்றனர். இப்படி கமகமவென ஊருக்கே சாப்பாடு போட்டு வரும் தொழிலதிபரின் மகன் தான் வஸந்த் ரவி என்கிற தகவல் அறிந்த ரசிகர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... இவங்க குடும்பத்துக்கே வயசு ஏறாதோ..? USAல் 55வது பிறந்தநாளை கொண்டாடிய கவிதா விஜயகுமார் - யாருனு தெரியுதா?

Read more Photos on
click me!

Recommended Stories