Ashok selvan Keerthi Pandian
சூது கவ்வும் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அசோக் செல்வன். இதையடுத்து வெளியான தெகிடி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவாக உருவெடுத்துள்ளார்.
Ashok selvan Keerthi Pandian marriage
குறிப்பாக ஓ மை கடவுளே படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பின்னர் அசோக் செல்வனின் மார்க்கெட் உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர் நடித்த மன்மத லீலை, சில நேரங்களில் சில மனிதர்கள், நித்தம் ஒரு வானம் ஆகிய திரைப்படங்கள் திரையரங்கில் பெரியளவில் வசூலிக்காவிட்டாலும், ஓடிடியில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.
Ashok selvan Keerthi Pandian wedding
கடைசியாக அசோக் செல்வன் நடிப்பில் போர் தொழில் திரைப்படம் வெளிவந்து சக்கைப்போடு போட்டது. விக்னேஷ் ராஜா இயக்கிய இப்படம் 50 நாட்களுக்கு மேல் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்ததோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. இந்த வெற்றி தந்த மகிழ்ச்சியோடு தற்போது திருமணத்துக்கும் தயாராகி உள்ளார் அசோக் செல்வன்.
இதையும் படியுங்கள்... அமெரிக்கா போனதும் ஆண் நண்பருடன் சமந்தா செஞ்ச வேலையை பாருங்க... அங்க போயும் இப்படியா?
Ashok selvan Keerthi Pandian marriage invitation
நடிகர் அசோக் செல்வனுக்கும் நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் வருகிற செப்டம்பர் மாதம் 13-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. பா.இரஞ்சித் தயாரிக்கும் ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்தபோது இவர்களிடையே காதல் மலர்ந்தது. இந்த காதல் ஜோடி தற்போது குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணத்துக்கு தயாராகி உள்ளது.
Ashok selvan Keerthi Pandian wedding date
இந்நிலையில், அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் ஜோடியின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதன்படி வருகிற செப்டம்பர் 13-ந் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இட்டேரி என்கிற கிராமத்தில் அமைந்துள்ள நடிகர் அருண் பாண்டியனின் பண்ணை வீட்டில் தான் திருமணம் நடைபெற உள்ளதாம். இந்த திருமணத்தில் பசுமை விருந்து பரிமாறப்படும் என்றும் அந்த பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... அடைத்து வைக்கப்பட்ட அப்பத்தா! கலங்கி நிற்கும் ஜீவனந்தத்தை பார்த்து ஜனனி கூறிய வார்த்தை! 'எதிர்நீச்சல்' அப்டேட்