பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நிகராக விஜய் டிவி ரசிகர்களின் ஒட்டு மொத்த வரவேற்பையும் பெற்ற ரியாலிட்டி ஷோவாக உள்ளது 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி. எப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பட வாய்ப்புகளை பிடிக்க முடியும் என்கிற நம்பிக்கையில், பிரபலங்கள் கலந்து கொள்கிறார்களோ, அதை போல் குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுவரை 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி வெற்றிகரமாக 3 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் நான்காவது சீசன் துவங்க உள்ளது. இதில் கடந்த மூன்று சீசர்களிலும் நடுவர்களாக இருந்த செஃப் தாமு ,மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் தான் நடுவர்களாக உள்ளனர் என்பதை தெரிவிக்கும் விதமாக ப்ரோமோ வெளியிட்டு உறுதி செய்தது விஜய் டிவி தரப்பு.
எனினும் இந்த முறை புதிய கோமாளிகளாக ஜிபி முத்து, மணிமேகலை, சுனிதா, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா, ரவீனா தாகா, ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி எப்போது துவங்க உள்ளது என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர்... ஜனவரி 28ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.