பழம்பெரும் நடிகர், எம் ஆர் ராதாவின் மகனான ராதாரவி, தன்னுடைய பள்ளி பருவங்களிலேயே ஜூலியர் சீசராக போன்ற நாடகங்களில் நடித்து, நடிப்பின் மீது தனக்குள்ள ஆர்வத்தை வெளி காட்டியவர். கல்லூரி காலங்களிலும், நண்பர்களுடன் இணைந்து பல நாடகங்களில் நடித்துள்ளார். வி கே ராமசாமி ,எம் ஆர் ஆர் வாசு, டி கே சந்திரன், போன்றவர்களின் நாடகங்களிலும் நடித்து தன்னுடைய திறமையை வெளிக்காட்டினார்.
இதைத் தொடர்ந்து இயக்குனர் டி ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா, வைதேகி காத்திருந்தாள், உயர்ந்த உள்ளம், சின்ன தம்பி, பூவெளி, உழைப்பாளி, குரு சிஷ்யன், என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்தார்.
'வீரன் வேலுத்தம்பி' என்ற படத்தில் மூலம் கதாநாயகனாகவும் நடித்த இவர் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால், மீண்டும் குணசித்ர வேடங்களில் நடிக்க துவங்கினார். தமிழை தாண்டி, தெலுங்கு, மலையாளம், போன்ற மொழிகளிலும் ராதாரவி நடித்துள்ளார்.