நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, நாளையுடன் முடிவடைய உள்ளது. கடைசியாக பிக்பாஸ் வீட்டில் இருந்த கதிரவன் பண மூட்டையை எடுத்து கொண்டு வெளியேறிய நிலையில், அமுதவாணன் பண பெட்டியை எடுத்து கொண்டு வெளியேறினார். எனவே ஷிவின், விக்ரமன், அசீம், மைனா நந்தினி ஆகியோர் பிக்பாஸ் இறுதி பட்டியலில் இருந்த நிலையில், நேற்றைய தினம் திடீர் என, மைனா நந்தினி கடைசி ஏவிக்ஷனில் வெளியேற்றப்பட்டார்.
எனவே இந்த முறை, டைட்டில் வெல்ல தகுதி உள்ளவர்கள் பட்டியலில்... ஷிவின், விக்ரமன், மற்றும் அசீம் ஆகியோர் உள்ளனர். குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே பொறுமையுடனும் நிதானத்துடனும் விளையாடி வரும் விக்ரமன் வெற்றி பெறுவாரா? அல்லது ஆர்ப்பாட்டம், கோபம், பேசக்கூடாத வார்த்தைகளை கூட பேசி, அதிருப்தியையும், மனதில் பட்டத்தை பேசும் போட்டியாளராக பார்க்கப்படும் அசீம் வெற்றி பெறுவாரா என இரு தரப்பு ஆர்மிகளுக்கு இடையே பெரிய போர் நடந்து வருகிறது சமூக வலைத்தளத்தில்.
தோளில் கை போட்டு அத்து மீறிய மாணவர்! ஆதங்கத்தை வெளிப்படுத்திய அபர்ணா பாலமுரளி.. சஸ்பென்ட் செய்த கல்லூரி!
அதே நேரம், திருநங்கை போட்டியாளர் ஒருவர்... பிக்பாஸ் போட்டியின் டைட்டில் வின்னராக மாறினால் அதுவும் ஒரு சாதனையாவே பார்க்கப்படும். இவரும் முதல் நாளில் இருந்து மிகவும் விவேகமாக விளையாடும் போட்டியாளராக பார்க்கப்பட்டு வருகிறார்.
விஜய் டிவி தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சி, சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து பிரபலமான மைனா நந்தினி, ஒரு நாளைக்கு 25,000 முதல் 28,000 வரை சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு 25,000 என வைத்து கொண்டால் கூட... 100 நாட்களுக்கு, 25,00000 லட்சத்துடன் வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.