சென்னையில் 46வது சர்வதேச புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 6ஆம் தேதி தொடங்கியது. இந்த கண்காட்சியை, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
அந்த வகையில் புத்தக பிரியர்களுக்காகவே ஒவ்வொரு ஆண்டும் சென்னையில், இந்த புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. சுமார் ஆயிரம் புத்தக விற்பனை அரங்குகளுடன் ஜனவரி 22 ஆம் தேதி முதல் நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள், என அனைவரும் வயதினருக்குமான பல்வேறு புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது.
இந்த புத்தகக் கண்காட்சியை இன்று பார்வையிட்ட நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் சிறைவாசிகளுக்காக புத்தகம் வேண்டி ஒவ்வொரு அரங்காக சென்று மடிபிச்சை கேட்டு புத்தகம் பெற்றது அனைவரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது. மேலும் இது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.