Aparna Balamurali
தமிழில் 8 தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர், மலையாள திரையுலகை சேர்ந்த அபர்ணா பாலமுரளி. இதைத்தொடர்ந்து, நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக இவர் நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.
இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி நடித்த பொம்மி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வாங்கிக் கொடுத்தது. தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் அபர்ணா பாலமுரளி, தற்போது மலையாளத்தில் வினீத் நடித்துள்ள தன்கம் படத்தில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் உள்ளே கதறி அழுத விக்ரமன்! ஏன்... வைரலாகும் வீடியோ!
aparna balamurali
இந்த திரைப்படம் ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளநிலையில், நடிகர் வினீத், அபர்ணா பாலமுரளி ஆகியோர் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக சட்ட கல்லூரிக்கு சென்றிருந்தனர். அப்போது அபர்ணா பாலமுரளிக்கு பூ கொடுத்து வரவேற்ற மாணவர் ஒருவர், அவரின் தோல் மீது கைபோட்டு புகைப்படம் எடுக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அந்த மாணவனை எர்ணாகுளம் சட்ட கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. அந்த மாணவர் பெயர் விஷ்ணு என்பதும் அவர் இரண்டாம் ஆண்டு மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.