விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஸ்டாண்ட் அப் காமெடியில் பட்டையை கிளைப்பினாலும், புகழுக்கு தனி அடையாளத்தை பெற்று தந்தது, விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இதில் கலந்து கொண்டு விளையாடிவரும் கோமாளிகளில் பலருக்கும் ஃபேவரட் என்றால் அது, புகழ் தான்.
மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ் தற்போது வெள்ளித்திரையிலும் படு பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் வலிமை, சபாபதி, எதற்கும் துணிந்தவன் என பல படங்களில் நடித்த அவர் அடுத்ததாக மிஸ்டர் ஜூ கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதே போல் 'காசே தான் கடவுளடா', 'ஏஜென்ட் கண்ணாயிரம்'. விஜய் சேர்த்துபதியின் 46 ஆவது படம் ஆகியவற்றிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி தன்னுடைய காதலி பென்சியவை இந்து முறைப்படி, திண்டிவனம் அருகே உள்ள தீவனுர் விநாயகரை கோவிலில் திருமணம், செய்து கொண்ட நிலையில்... இவர்கள் இருவரும் ஏற்கனவே பெரியார் பதிப்பகத்தில் திருமணம் நடந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலானது. எனவே இது புகழுக்கு இரண்டாவது முறையாக நடந்த திருமணம் என பலரும் கூறி வந்தனர்.
மேலும் செய்திகள்: பக்கா கிளாமரில் பட்டையை கிளப்பும் கீர்த்தி சுரேஷ்..க்யூட் போட்டோஸ் உள்ளே !
இதை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தையும் புகழ் தற்போது வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தை வெளியிட்டு புகழ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாவது... "என் தந்தை அன்பிற்கு ஒரு முறை... என் தாய் அன்பிற்கு ஒரு முறை...என் மனைவி குடும்பத்தார் அன்பிற்கு ஒரு முறை...வேறு அன்பு உள்ளங்கள் ஆசை பட்டாள் மேலும் ஒரு முறை தயார் .இந்தியனாக இருக்கிறேன்எல்லா புகழும் இறைவனுக்கே" என கூறியுள்ளார்.