ஜவானால் கார்த்தியின் ஜப்பான் படவாய்ப்பை இழந்த விஜய் சேதுபதி! அவருக்குபதில் புஷ்பா வில்லனை கமிட் செய்த படக்குழு

First Published | Sep 5, 2022, 11:45 AM IST

Japan movie : கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி வரும் ஜப்பான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவர் தற்போது விலகி உள்ளாராம்.

நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த மாதம் ரிலீஸான விருமன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார் கார்த்தி. இவர் நடித்த மேலும் இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன. அதன்படி இந்த மாதம் இறுதியில் இவர் நடித்த பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் ரிலீசாக உள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தி நடித்துள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக கார்த்தியின் சர்தார் படம் ரிலீசாக உள்ளது. இப்படம் அடுத்தமாதம் தீபாவளி பண்டிகையன்று திரைகாண உள்ளது. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கி உள்ளார். இதில் நடிகர் கார்த்தி போலீஸ் அதிகாரி, வயதானவர் என இருவேறு தோற்றங்களில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். 

இதையும் படியுங்கள்... Amala Paul : இரண்டாவது திருமணம் எப்போது? - முதன்முறையாக மறுமணம் குறித்து மனம்திறந்த அமலா பால்

Tap to resize

இதையடுத்து கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜப்பான். குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி போன்ற படங்களை இயக்கிய ராஜு முருகன் தான் இப்படத்தை இயக்குகிறார். இதில் நடிகர் கார்த்திக்கு வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதியை படக்குழு முதலில் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் அவர் தற்போது விலகி உள்ளார்.

ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அவர் இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி விலகி விட்டதால் அவருக்கு பதில் தெலுங்கு நடிகர் சுனில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். இவர் கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Anushka : இப்படி இருந்தா... நடிகை அனுஷ்காவுக்கு திருமணமே ஆகாது? அடிச்சு சொல்லும் பிரபலம் - காரணம் இதுதானாம்

Latest Videos

click me!