கார் மற்றும் பைக்குகள் மீது அலாதி பிரியம் கொண்டவர் அஜித். ஆரம்பத்தில் கார் பந்தயங்களில் ஆர்வமாக பங்கெடுத்து வந்த அஜித், அதில் பலமுறை விபத்தில் சிக்கி, அதன்மூலம் தனது சினிமா கெரியரும் பாதிப்பை சந்தித்ததால், அதில் கலந்துகொள்வதை சுத்தமாக நிறுத்திக்கொண்டார். அதற்கு பதிலாக பைக்கின் மீது தனது கவனத்தை செலுத்த தொடங்கினார் அஜித்.
தற்போது லடாக்கிற்கு பைக் ட்ரிப் சென்றுள்ளார் அஜித். அங்கு அவருடன் நடிகை மஞ்சு வாரியரும் இணைந்து பைக் ரைடிங் செய்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏகே 61 படத்தில் அஜித்தும், மஞ்சு வாரியரும் முதன்முறையாக இணைந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், லடாக் ட்ரிப்பிற்காக நடிகர் அஜித் ஓட்டிச் சென்ற பைக்கிற்கு இன்சூரன்ஸ் இல்லை என புது சர்ச்சை கிளம்பி உள்ளது. அந்த பைக்கின் இன்சூரன்ஸ் கடந்த 2020-ம் ஆண்டே முடிந்துவிட்டதாகவும், அதன்பின் அதனை அஜித் புதுப்பிக்கவே இல்லை என ஒருவர் ஆதாரத்தை வெளியிட்டு உள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இன்சூரன்ஸ் இல்லாத பைக்கில் தான் அஜித் இந்தியா முழுவதும் வலம் வருகிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... அடக்கடவுளே..விக்ரம் கோப்ராவுக்கு இப்படி ஒரு நிலையா? கதறும் படக்குழு !