நாயகனும் வரார்... தளபதியும் வரார்..! மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ஆடியோ லான்ச் அப்டேட் இதோ

Published : Sep 05, 2022, 08:23 AM IST

Ponniyin selvan : மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள உள்ள பிரபலங்களின் விவரங்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

PREV
14
நாயகனும் வரார்... தளபதியும் வரார்..! மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ஆடியோ லான்ச் அப்டேட் இதோ

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஜெயராம், விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான இது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வருகிற செப்டம்பர் 30-ந் தேதி திரையரங்குகளில் இப்படம் ரிலீசாக உள்ளது.

24

இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இப்படத்தின் முதல் பாகத்தை இந்த ஆண்டும், இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டும் வெளியிட உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தோட்டா தரணி கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார். இப்படத்தை பிரம்மாண்ட பொருட் செலவில் லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது.

இதையும் படியுங்கள்... பழைய மாதிரி இல்ல... ஆளே மாறிப்போன அதுல்யா - ஏன் பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சிங்கனு கேள்வி எழுப்பும் ரசிகர்கள்

34

பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து இதுவரை பொன்னி நதி மற்றும் சோழா சோழா ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளன. இந்த இரண்டு பாடல்களுக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் இப்படத்தின் எஞ்சியுள்ள பாடல்கள் எப்போது ரிலீசாகும் என்கிற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் எழுந்த வண்ணம் உள்ளது.

44

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவை இன்னும் சிறப்பிக்கும் விதமாக இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்துகொள்ள உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமல் நாயகன் படத்திலும், ரஜினி தளபதி படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... தமிழக அரசு விருதுகளை வென்ற ‘பசங்க’ மற்றும் ‘காக்கா முட்டை’ பாய்ஸ்... ஆளே அடையாளம் தெரியலயே - வைரல் போட்டோஸ்

Read more Photos on
click me!

Recommended Stories