கோயம்புத்தூர் பெண்ணான அதுல்யா, கடந்த 2017-ம் ஆண்டு ரிலீசான காதல் கண் கட்டுதே படம் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார். அதுல்யாவால் தான் அப்படம் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றது என்றே சொல்லலாம். பார்ப்பதற்கு ஹோம்லி லுக்கில் இருந்த இவர், அடுத்ததாக ஏமாலி என்கிற படத்தில் கிளாமராக நடித்து அதிர்ச்சி கொடுத்தார்.
பின்னர் அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ் என தொடர்ந்து இவர் படங்களில் நடித்து வந்தாலும், இதுவரை எதிர்பார்த்த வெற்றி அதுல்யாவுக்கு கிடைக்கவில்லை. பட வாய்ப்புகளை பிடிக்க தொடர்ந்து போட்டோஷூட்களை நடத்தி வருகிறார் அதுல்யா. அதில் சமீபகாலமாக கிளாமர் உடையில் அதிகளவில் போட்டோஷூட் நடத்தி வருகிறார்.
இதையும் படியுங்கள்... பக்கா கிளாமரில் பட்டையை கிளப்பும் கீர்த்தி சுரேஷ்..க்யூட் போட்டோஸ் உள்ளே !
அந்த வகையில், நேற்று கிளாமர் உடையில் போட்டோஷூட் நடத்தி இவர் வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர். அதில் முகமெல்லாம் மாறி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு வித்தியாசமான லுக்கில் இருப்பதாக பேரதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், அவரின் முகம் பழையபடி இல்லாமல் போனதற்கு அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது தான் காரணம் என கூறி வருகின்றனர்.
சிலரோ இது அதுல்யாவா என்று கேட்கும் அளவிற்கு அவரின் முகத்தோற்றம் அமைந்துள்ளது. கெரியரில் படிப்படியாக வளர்ந்து வரும் சமயத்தில் இப்படி பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் தேவையா என கேள்வி எழுப்பி வருகின்றனர். பெரும்பாலானோர் நீங்க ஹோலி லுக்கில் இருந்தால் தான் அழகு, இது உங்களுக்கு சுத்தமாக செட் ஆகவில்லை என விமர்சனங்களையும் முன் வைத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... லைகர் படு தோல்வி..சம்பளமே தேவையில்லை என முடிவெடுத்த விஜய் தேவரகொண்டா