சீயான் விக்ரமின் கோப்ரா படம் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படம் மூலம் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி தமிழுக்கு அறிமுகமாகியுள்ளார்.கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது கோப்ரா.
24
cobra
அஜய் ஞானமுத்து இயக்கிய இந்த படத்தின் விக்ரம் கணித மேதையாக நடித்துள்ளார். பல வேடங்கள் தரித்து பல நாடுகளில் உள்ள வில்லன்களை அழிக்கும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் சீயான். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த படம் அதிக எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியானதால் முதல் நாளில் ரூ. 12 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்தது. இதனால் சிறந்த ஓப்பனிங் என விக்ரம் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். பின்னர் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
'கோப்ரா' திரைப்படம் 2ஆம் நாள் ரூ 7.8 கோடியும், 3ஆம் நாள் ரூ 3.5 கோடியும் வசூலித்துள்ளது, இதன் மூலம் படத்தின் மொத்த வசூல் 4 நாட்களில் ரூ 28 கோடியை எட்டியது. படம் மிகக்குறைந்த வசூலை பெற்று இருப்பது விக்ரமின் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.