தற்போது இவர் நடிப்பில் லைகர் படம் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் எழுதி இயக்கிய இந்த படம் MMA வீரர் குறித்தான கதைக்களமாகும். இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவான இந்த படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இதில் அனன்யா பாண்டே , ரம்யா கிருஷ்ணா மற்றும் ரோனித் ராய் ஆகியோருடன் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார். மேலும் விஜய் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...2011 - 2014 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் பெற்ற கலைஞர்கள் பட்டியல் இதோ !