தமிழக அரசு விருதுகளை வென்ற ‘பசங்க’ மற்றும் ‘காக்கா முட்டை’ பாய்ஸ்... ஆளே அடையாளம் தெரியலயே - வைரல் போட்டோஸ்

First Published Sep 4, 2022, 7:55 PM IST

Tamilnadu State Awards : பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் நடித்த சிறுவர்களுக்கும், மணிகண்டனின் காக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவர்களுக்கும் தமிழக அரசு விருது வழங்கப்பட்டது.

பசங்க படத்தில் அன்புக்கரசு கேரக்டரில் நடித்த கிஷோர்

2009 முதல் 2014-ம் ஆண்டுவரை வெளிவந்த சிறந்த படங்களுக்கும், அதில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் விருது வழங்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் 2009-ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பசங்க படத்திற்கு நான்கு விருதுகள் கிடைத்தன.

பசங்க படத்தில் ஜீவா கேரக்டரில் நடித்த ஸ்ரீராம்

குறிப்பாக அதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி இருந்த கிஷோர் மற்றும் ஸ்ரீராம் ஆகியோருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டன. இப்படத்தின் ஸ்ரீராம் ஜீவாவாகவும், கிஷோர் அன்புக்கரசு என்கிற கேரக்டரிலும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... சிறந்த பாடலாசிரியர்... தமிழக அரசின் 3 விருதுகளை வென்ற நா.முத்துக்குமார் - தந்தை சார்பில் விருது பெற்றார் மகன்

காக்கா முட்டை படத்தில் பெரிய காக்கா முட்டையாக நடித்த விக்னேஷ்

அதேபோல் 2014-ம் ஆண்டு மணிகண்டன் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான காக்கா முட்டை படத்தில் நடித்த ரமேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டன. வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் இணைந்து தயாரித்திருந்த இப்படமும் தேசிய விருதை வென்றிருந்தது.

காக்கா முட்டை படத்தில் சின்ன காக்கா முட்டையாக நடித்த ரமேஷ்

இப்படத்தில் ரமேஷ் சின்ன காக்கா முட்டையாகவும், விக்னேஷ் பெரிய காக்கா முட்டை கேரக்டரிலும் நடித்திருந்தார். அப்படத்தில் சிறுவர்களாக இருந்த அவர்கள் தற்போது மளமளவென வளர்ந்து ஹீரோக்களைப் போல் ஆகிவிட்டனர். அவர்கள விருது வாங்கியபோது அனைவரும் ஆச்சர்யமாக பார்த்தனர். அவர்கள் விருதுவென்றபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... 2009-ம் ஆண்டுக்கான திரைப்பட விருது பெற்ற கலைஞர்களின் பட்டியல்

click me!