prabhass project k
பிரமாண்ட இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படம் தான் 'பாகுபலி'. இந்த படத்திற்குப் பிறகு பிரபாஸ் தென்னிந்தியாவில் அறியப்பட்ட நடிகர்களில் முன்னணியில் உள்ளார். இரண்டு பாகங்களை தொடர்ந்து சாஹோ, ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதில் சாஹோ ஓரளவு வெற்றியை கண்டது. இதை தொடர்ந்து சமீபத்தில் இவர் நடித்த ராதே ஷ்யாம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்தது.
prabhass project k
தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'சலார்' மற்றும் நாக் அஸ்வினுடன் 'புராஜெக்ட் கே' ஆகிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் பிரபாஸ். இதில் 'புராஜெக்ட் கே' திரைப்படம் அறிவியல் புனைகதை என கூறப்படுகிறது. இந்த பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..வாடிவாசல் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வெற்றி மாறன்..வைரல் வீடியோ !
prabhass project k
இப்படத்தில் தீபிகா படுகோனே , அமிதாப் பச்சன் , திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த புதிய திட்டத்தில் இயக்குனர் நாக் அஸ்வின், மகேஷ் பாபு, சூர்யா மற்றும் துல்கர் சல்மான் ஆகியோரும் முக்கிய கேமியோ வேடங்களில் நடிக்கவுள்ளார்களாம்.. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
மேலும் செய்திகளுக்கு...நீல நிற உடையில் இளம் நாயகிகளை தோற்கடிக்கும் சினேகா...புதிய புகைப்படம் இதோ