தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பூரி ஜெகன்நாத். அங்கு இவர் இயக்கத்தில் வெளியான போக்கிரி, பிசினஸ்மேன், ஐ ஸ்மார்ட் சங்கர் ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தன. குறிப்பாக தமிழில் விஜய் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான போக்கிரி படம் பூரி ஜெகன்நாத் இயக்கிய தெலுங்கு ரீமேக் தான்.