தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது வாத்தி, நானே வருவேன், கேப்டன் மில்லர் போன்ற திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. அதேபோல் வட சென்னை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இதில் வாத்தி மற்றும் நானே வருவேன் ஆகிய படங்கள் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன.
இதில் வாத்தி படத்தை வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். இப்படம் மூலம் நடிகர் தனுஷ் தெலுங்கிலும் அறிமுகமாக உள்ளார். இதில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. அதேபோல் நானே வருவேன் படத்தை செல்வராகவன் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... கைதி பட கார்த்தி லுக்கில் விஷால்... வைரலாகும் மார்க் ஆண்டனி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் தனுஷ். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார். இவர் ராக்கி மற்றும் சாணிக் காயிதம் ஆகிய படங்களை இயக்கியவர் ஆவார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்த மாதமே தொடங்கப்பட இருந்த இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. இதற்கு காரணம் தனுஷ் தான் என கூறப்படுகிறது.
தனுஷின் சம்பள விஷயம் காரணமாக இப்படத்தின் ஷூட்டிங் தாமதமாகி உள்ளதாம். நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்திற்காக ரூ.15 கோடி சம்பளமாக வாங்கி இருந்தார். அப்படம் ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் தற்போது சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்திவிட்டாராம். தனுஷ் ரூ.30 கோடி சம்பளம் கேட்பதால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பு நிறுவனம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். இதனால் அப்படத்தின் ஷூட்டிங் தாமதமாவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இதையும் படியுங்கள்... பிரமாண்ட கட்டவுட்டுடன் ரஜினி 47 கொண்டாடிய ரசிகர்கள்..வைரல் வீடியோ