தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் கடும் சரிவை சந்தித்த கோப்ரா... ரிலீசாகி ஒரு வாரம் கூட ஆகல அதற்குள் இந்த நிலைமையா..!

Published : Sep 04, 2022, 11:34 AM IST

cobra : மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ரிலீஸான கோப்ரா திரைப்படத்தின் வசூல் நிலவரத்தை பற்றி பார்க்கலாம்.

PREV
14
தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் கடும் சரிவை சந்தித்த கோப்ரா... ரிலீசாகி ஒரு வாரம் கூட ஆகல அதற்குள் இந்த நிலைமையா..!

சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் ரிலீசான படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்கியிருந்த இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்தார். இப்படத்தில் விக்ரம் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, ரோஷன் ஆண்ட்ரூஸ், இர்பான் பதான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

24

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம் முதல் நாளே கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இதற்கு காரணம் இப்படத்தின் நீளம் தான். படம் 3 மணிநேரத்திற்கு மேல் ரன்னிங் டைம் கொண்டிருந்ததால், பார்ப்பவர்களுக்கு சோர்வை ஏற்படுத்துவதாக கூறப்பட்டது.

இதையும் படியுங்கள்... 13 வயசுலயே செயின் ஸ்மோக்கர்.. ஒருநாளைக்கு 170 சிகரெட் பிடித்த வெற்றிமாறன் அதிலிருந்து மீண்டுவந்த கதை தெரியுமா?

34

இதையடுத்து அதிரடியாக நடவடிக்கை எடுத்த படக்குழு, மறுநாளே படத்தின் 20 நிமிட காட்சிகளுக்கு கத்திரி போட்டு படத்தை 2 மணிநேரம் 43 நிமிடம் ரன்னிங் டைம் கொண்டதாக மாற்றி திரையிட்டனர். அவ்வாறு திரையிட்ட பிறகும் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் குறையத் தொடங்கியது.

44

குறிப்பாக தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் இப்படம் கடும் சரிவை சந்தித்து உள்ளது. முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.9.28 கோடி வசூலித்த இப்படம் நெகடிவ் விமர்சனங்கள் காரணமாக இரண்டாம் நாளில் ரூ.2.56 கோடி மட்டுமே வசூலித்தது. மூன்றாம் நாளில் இதன் வசூல் மேலும் சரிந்து ரூ.1.83 கோடி மட்டுமே கிடைத்தது. இதே நிலை நீடித்தால் படம் கடும் தோல்வியை சந்திக்கும் அபாயம் உள்ளது. இருப்பினும் சனி மற்றும் ஞாயிற்று கிழமை இப்படத்தின் வசூல் அதிகரித்தால் மட்டுமே நஷ்டம் இன்றி தப்பிக்கும் என கோலிவுட் வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்...  என்னது ..ராஷ்மிகாவுக்கு ராசி இல்லையா?..பாலிவுட்டில் மோசமான பெயரை சம்பாதித்த வாரிசு பட நாயகி

Read more Photos on
click me!

Recommended Stories